கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சூலூர் சட்டமன்ற தொகுதியில் அதிமுகவின் சார்பில் எம்.எல்.ஏ வாக இருந்தவர் கனகராஜ் (வயது 64). இவர் நேற்று முன் தினம் காலை வீட்டில் செய்தித்தாள் படித்து கொண்டு இருந்த போது நெஞ்சு வலியால் அகால மரணடைந்துள்ளார்.
தற்போது சூலூர் தொகுதி காலியானதாக அறிவித்துள்ளனர். தேர்தல் ஆணையத்திற்கு சட்டப்பேரவை செயலாளர் கடிதம் அனுப்பி உள்ளார். சூலூர் தொகுதி எம்எல்ஏ கனகராஜ் மறைவை தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுப்பட்டுள்ளது.
மேலும், ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி தேர்தல் முடிவுகள் தொடர்பாக புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி தொடர்ந்த வழக்கை அவர் திரும்ப பெற சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்தது. இதையடுத்து அங்கு இடைத்தேர்தல் நடத்துவதற்கான தடை நீக்கப்பட்டது.
திருப்பரங்குன்றம் தொகுதியில் அதிமுகவின் ஏகே போஸ் பெற்ற வெற்றி செல்லாது என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் சரவணன் தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்றம் எந்த தீர்ப்பு வழங்கியுள்ளது. மேலும், தன்னை வெற்றிபெற்றதாக அறிவிக்கக்கோரிய திமுக வேட்பாளர் சரவணனின் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
இதனால், ஒட்டப்பிடாரம், சூலூர், திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்த தடை இல்லை. ஆகவே, இந்த மூன்று தெகுதிகளில் விரைவில் இடைத்தேர்தல் நடத்த வாய்ப்பு உள்ளது.