தமிழக மக்கள் எதிர்பார்த்த ஒரு தீர்ப்பு! அதிரடி உத்தரவு!

2019 மக்களவை தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. இதில் தமிழகத்தில் 39 தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் ஒரு தொகுதிக்கும் ஒரே கட்டமாக ஏப்ரல் 18ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது.

இந்நிலையில், தமிழகத்தில் தேர்தல் நடைபெற உள்ள ஏப்ரல் 18ம் தேதி கள்ளழகர் திருவிழா நடைபெற இருப்பதால் தேர்தல் தேதியை மாற்ற அனைத்து கட்சிகள் கோரிக்கை வைத்தது. இந்த தேர்தலை தள்ளி வைக்கக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதில், “மதுரையில் சித்திரை திருவிழா தேரோட்டம் ஏப்ரல் 18-ந் தேதி நடைபெற உள்ளதால், அன்று இந்துக்களால் வாக்களிக்க முடியாது. அதனால், தேர்தலை வேறு தேதிக்கு தள்ளிவைக்கவேண்டும்” என்று பார்த்தசாரதி என்பவர் வழக்கு தொடர்ந்தார்.

இதைத்தொடர்ந்து, தமிழ்நாடு பிஷப் கவுன்சில் சார்பில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், “ஏப்ரல் 18-ந் தேதி பெரிய வியாழன் வருவதால், அன்று கிறிஸ்தவர்களால் வாக்களிக்க வரமுடியாது. மேலும், தேவாலயங்களுடன் பள்ளிக்கூடங்களும் இருப்பதால், அங்கு தேர்தல் நடத்தப்பட்டால், வழிபாடு செய்யவும் பாதிப்பு ஏற்படும். அதனால், தேர்தலை தள்ளிவைக்கவேண்டும்” மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்குகள் உயர் நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.மணிக்குமார், சுப்பிரமணியம் பிரசாத் ஆகியோர் நேற்று விசாரித்தனர். இந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள், “மதம் சார்ந்த வழிபாடுகள் எப்படி ஒவ்வொருவருக்கும் கடமையாக உள்ளதோ, அதேபோல தேர்தலில் வாக்களிப்பதையும் கடமையாக கருத வேண்டும்” என்று கருத்து தெரிவித்தனர். பின்னர், இந்த வழக்குகளின் தீர்ப்பை இன்று பிறப்பிப்பதாக கூறினர்.

இந்நிலையில், மக்களவை தேர்தலை தள்ளிவைக்க கோரிய வழக்குகள் தள்ளுபடி செய்தது உயர் நீதிமன்றம். சித்திரைத் திருவிழா மற்றும் பெரிய வியாழன் பண்டிகையை சுட்டிக்காட்டி, மக்களவை தேர்தலை தள்ளிவைக்க கோரிய வழக்குகள் தள்ளுபடி. மதுரையில் வாக்குப்பதிவு இரவு 8 மணிவரை நீட்டிப்பு, கிறிஸ்தவர்கள் வழிபாட்டுக்கு தடங்கலின்றி வந்து செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையம் அளித்த விளக்கத்தை ஏற்று உயர் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.