குளுக்கோஸ் போன்று உடலில் ஏற்றப்பட்ட பழச்சாறுகள்.! அரங்கேறிய விபரீதம்…!

பழங்கள் மற்றும் காய்கறிகளை நாம் உண்டு வந்தால் நமது உடலுக்கு அதிகளவு நன்மைகள் கிடைக்கிறது. இதன் மூலமாக நமது உடலுக்கு பல்வேறு விதமான சத்துக்கள் கிடைக்கபெற்று., நமது உடல் நலமானது பாதுகாக்கப்படுகிறது. எதிர்பாராத சூழலில் நமது உடல் நலமானது பாதிக்கப்பட்டால்., சில நேரத்தில் மட்டுமே குளுக்கோஸ் மருத்துவர்கள் ஏற்றுவதற்கு ஒப்புகொள்கின்றனர்.

அந்த வகையில்., பழச்சாற்றை எடுத்து கொண்ட பெண் தன்னுடல் வழியாக தானே பழச்சாறுகளை உட்செலுத்தியுள்ளார். இதனால் மரணத்தின் விளிம்பிற்கு சென்ற அவரை தற்போது அதிஷ்டம் காப்பாற்றியுள்ளது.

சீனாவை சார்ந்த பெண் தனது நரம்புகளின் மூலமாக பழச்சாறுகளை உட்செலுத்தியுள்ளார். இதனால் அவர்களின் கல்லீரல்., சிறுநீரகம்., இதயம் மற்றும் நுரையீரல் போன்ற உடல் உறுப்புக்கள் உடனடியாக பாதிப்புகளுக்கு உள்ளாகியுள்ளது.

மேலும்., உடலில் பழச்சாற்றுகளை செலுத்திய சில நொடித்துளிகளிலேயே உடலில் அரிப்பு மற்றும் உடலின் வெப்பநிலை அதிகரித்து போன்ற பிரச்சனையில் சிக்கி பெரும் துயரத்திற்கு ஆளாகி தற்போது மரணத்தின் விளிம்பில் இருந்து தப்பியுள்ளார்.

இந்த விசயத்துக்கு பல எதிர்மறையான விமர்சனங்கள் கிளம்பி வந்தாலும்., சில பொழுது போக்கு நடவடிக்கைகளுக்காக உங்களின் வாழ்க்கையை பணயம் வைக்காதீர்கள் என்று தெரிவித்து வருகின்றனர்.