இந்த உலகில் உள்ள பல்வேறு பகுதிகளில் பல விதமான விபத்துகள் நொடிப்பொழுதில் அரங்கேறிய வண்ணம் உள்ளது. அவ்வாறு அரங்கேறும் கோர விபத்துகளில் சிக்கும் பலர் தங்களின் உயிரை இழந்தும்., உடல் உறுப்புகளை இழந்தும் பெரும் அவதியடைந்து வருகின்றனர்.
இது குறித்த செய்திகளை நாம் தொடர்ந்து பல்வேறு விதமான செய்தி நாளிதழ்களில் கேட்டு அதிர்ச்சியடைந்து., அனுதாபங்களை தெரிவித்தும் வருகிறோம். அந்த வகையில்., கானா நாட்டில் இருக்கும் தெற்கு பகுதியில் போனோ என்ற தனி மாகாணமானது உள்ளது.
இந்த மாகாணங்களை இணைக்கும் பிரதான சாலையில் சென்ற பேருந்துகள் எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் மோதி பெரும் விபத்தை ஏற்படுத்தியது. இந்த விபத்தில் பேருந்தில் பயணித்த சுமார் 60 பேர் பரிதாபமாக சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்துள்ளனர்.
இது குறித்து தகவலறிந்த காவல் துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்பு பணியை மேற்கொண்டு., உயிருக்கு போராடியவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இறந்தவர்களின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவமானது அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும்., சாலை விபத்துகள் அந்த நாடுகளில் தொடர்ந்து ஏற்படுவது பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.