இந்தியாவின் கேரள மாநிலத்தை நடுக்கிய ஆணவக்கொலையின் முதலாம் ஆண்டில் தமது காதலை மார்போடு அணைத்த இளைஞர்.
திருமணத்தன்று சொந்தம் தந்தையால் கொல்லப்பட்ட தமது காதலி தொடர்பில் ஓராண்டு நிறைவில் இளைஞர் எழுதிய பேஸ்புக் பதிவு பலரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது.
இரு குடும்பத்தாரின் ஒப்புதலுடன் திருமணம் செய்து கொள்ள ஆச்சைப்பட்ட இளம்பெண், சொந்த தந்தையால் படுகொலை செய்யப்பட்ட தகவல் அறிந்து உடைந்து நொறுங்கிய பிரிஜேஷ் என்ற இளைஞரின் புகைப்படம் பொதுமக்களின் நெஞ்சை உலுக்கியது.
திருமணத்திற்கு சில மணி நேரமே மீதம் இருந்த இருந்த நிலையில், ஆதிரா சொந்தம் தந்தையால் கத்தியால் குத்தப்பட்டு மரணமடைந்தார்.
தமது சாதியை விடுத்து வேறு சாதி இளைஞருடன் காதல் திருமணம் செய்துகொள்ள முயன்றதே இறுதியில் கொலையில் முடிந்துள்ளது.
அதிக மதுபோதையில் இருந்ததாலையே மகளை கொலை செய்ததாக, பொலிசாரிடம் ஆதிராவின் தந்தை ராஜன் தெரிவித்துள்ளார்.
ஆதிரா, வேறு சாதி இளைஞரை காதலிப்பதை தந்தையான ராஜன் கடுமையாக எதிர்த்து வந்துள்ளார்.
இந்த விவகாரம் பொலிசார் தலையிட்டு முடிவுக்கு கொண்டுவந்தனர். மட்டுமின்றி இரு குடும்பத்தாருக்கும் பொதுவாக கோவிலில் வைத்து திருமணம் நடத்தவும் முடிவானது.
ஆனால் திருமணத்தன்று மதுபோதையில் வீட்டிற்கு வந்த ராஜன், தமது மனைவி மற்றும் மகளிடம் திருமணம் தொடர்பில் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
இதில் தந்தையிடம் இருந்து தப்பித்து அருகாமையில் உள்ள குடியிருப்பு ஒன்றில் மறைந்திருந்த ஆதிராவை தேடிச் சென்று ராஜன் கொலை செய்துள்ளது விசாரணையில் தெரியவந்தது.