பாரசீக புத்தாண்டு தினமான நேற்று ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் நடந்த தொடர் குண்டுவெடிப்பு தாக்குதல்களில் 30-க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்தனர்
ஆப்கானிஸ்தான் நாட்டின் பல பகுதிகளில் இன்று பாரசீக புத்தாண்டு கோலாகலமாக கொண்டாடப்பட்டது ‘நவ்ரோஸ்’ என்றழைக்கப்படும் புத்தாண்டையொட்டி பால்க் நகரில் நடைபெற்ற புத்தாண்டு விழாவில் அதிபர் அஷ்ரப் கானி பங்கேற்று உரையாற்றினார்
இந்த கொண்டாட்டங்களுக்கு இடையில் தலைநகர் காபூலின் மேற்கு பகுதியில் நடந்த தொடர் குண்டுவெடிப்பு தாக்குதல்களில் 30-க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்தனர்
கார்ட் இ சக்ஹி மற்றும் ஜமால் மினா பகுதிகளில் இரு ரொக்கெட்டுகள் மற்றும் கையெறி குண்டுகளை வீசி பயங்கரவாதிகள் நடத்திய இந்த தாக்குதலுக்கு தலிபான்கள் உள்பட எந்த பயங்கரவாத இயக்கமும் பொறுப்பேற்கவில்லை
இன்றைய தாக்குதலில் படுகாயமடைந்த சுமார் 25 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சைபெற்று வருவதாகவும், அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுவதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.