தற்போதைய வாழ்க்கைமுறையில் அனைவரும் பயப்படும் வியாதி என்றால் அது புற்றுநோய் தான். ஆனால் இன்றைய மருத்துவ வளர்ச்சியில் புற்றுநோய் தடுப்பு பெரிய அளவில் வளர்ந்துள்ளது. முந்தய களங்களில் புற்றுநோய் வந்தாலே உயிரிழக்க வேண்டும் என்ற சூழ்நிலை நிலவி வந்தது. ஆனால் தற்போது 99 சதவீதம் புற்றுநோயை குணப்படுத்தலாம் என்ற அளவிற்கு மருத்துவத்துறை முன்னேறிவிட்டது.
புற்றுநோய் உடலில் பல இடங்களில் ஏற்படுகிறது. அதில் நுரையீரல் புற்றுநோய் ஆண்களை அதிகமாக தாக்கிவருவதாக கூறப்படுகிறது. புகைப்பழக்கம் உள்ளவர்களுக்கு இந்த நுரையீரல் புற்றுநோய் அதிகம் வருவதற்கு வாய்ப்புள்ளதாக சிகிச்சையாளர்கள் கூறுகின்றனர்.
நுரையீரல் புற்றுநோய் வருவதற்கு அறிகுறியாக மூச்சுத்திணறல்,இரத்தச்சளி,கடுமையான இருமல், மூச்சிரைப்பு மார்பு வலி அல்லது அடிவயிற்றில் வலி உண்டாகுதல்,உடல் மிக மெலிவு போன்றவை ஏற்படுமாம்.
நுரையீரல் புற்றுநோய் வராமல் தடுக்க, கற்றாழை சாறு தினமும் அதிகாலையில் குடித்துவந்தால் முன்கூட்டியே இதனை தடுக்க முடியுமாம். அதேபோல் மணத்தக்காளிப் பழங்களை உலர வைத்து வற்றலாகப் பயன்படுத்தி சாப்பிட்டுவந்தால் நுரையீரல் புற்றுநோய் வராமல் தடுக்க முடியும் என சிகிச்சையாளர்கள் கூறுகின்றனர். மேலும் மணத்தக்காளியைக் கீரையாகப் பயன்படுத்தினால் சளி, இருமல் போன்ற கப நோய்களும் விலகும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.
புகையிலைப் பயன்பாடு, ஆரோக்கியமில்லாத உணவு முறை, குறைவான உடல் இயக்கம், மது ஆகியவையே புற்றுநோய்க்கு முக்கியக் காரணமாக அமைகிறது. எனவே இந்த விஷயத்தில் ஆண்கள் கட்டுப்பாடாக இருந்தால் புற்றுநோய் வராமல் தடுக்கலாம்.