தமிழகம் முழுவதும் அனைத்து தொகுதிகளிலும் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மைத்துனர் அருள்மொழித்தேவன் விருதுநகர் மக்களவைத் தொகுதியில் வேட்பாளராக இன்று மனுத்தாக்கல் செய்தார். இவர் நாம் தமிழர் கட்சியின் சார்பில் களமிறங்குகிறார்.
அருள்மொழித்தேவன் அண்ணன் டேவிட் அண்ணாதுரை தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் மதுரை மக்களவைத் தொகுதியில் போட்டியிடுகிறார் என்பது ஏற்கனவே தெரிந்த செய்தி தான். இருவரும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் மைத்துனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இவர்களின் தந்தை ஆன முன்னாள் சபாநாயகர் கா.காளிமுத்து அதிமுகவில் இருந்தார். அருள்மொழித்தேவன் விருதுநகர் மக்களவைத் தொகுதி வேட்பாளராக நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடுகிறார். இன்று தன் கட்சியினருடன் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அவர் வேட்புமனுத்தாக்கல் செய்தார்.
அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், நாம் தமிழர் கட்சியில் 10 ஆண்டுகளாக அடிப்படை உறுப்பினராக உள்ளேன். தமிழ் மீதுள்ள பற்றின் அடிப்படையிலேயே எனக்கு இந்த வாய்ப்பு கிடைத்தது என கூறியுள்ளார்.