இளம் பெண்ணுக்கு ஹோட்டலில் நடந்த கொடுமை!

திருகோணமலை, உப்புவெலி சுற்றுலா எல்லைக்குட்பட்ட ஹோட்டலில் ஸ்பெயின் நாட்டு பெண் ஒருவர் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

அந்த பெண்ணை துஷ்பிரயோகம் செய்த ஹோட்டலின் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளதாக உப்புவெல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

20 வயதான இளம் பெண் ஹோட்டலில் தனியாக இருந்த வேளை ஹோட்டலின் உரிமையாளர் துஷ்பிரயோகம் செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

துஷ்பிரயோகத்திற்குள்ளான ஸ்பெயின் நாட்டு பெண் திருகோணமலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ள நிலையில் உப்புவெலி பொலிஸார் சம்பவம் தொடர்பில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.