தனது மிக உயர்ந்த கண்ணியத்திற்கு சேதம் விளைவித்ததாக கூறி வடகொரிய தலைவர் கிம் ஜோங் உன் தமது ஆஸ்தான புகைப்பட கலைஞர் மீது நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.
குறித்த நபரை தமது ஆஸ்தான புகைப்பட கலைஞர் அந்தஸ்தில் இருந்து நீக்கியதுடன் கொரிய தொழிலாள்ர் கட்சியில் இருந்தும் வெளியேற்றியுள்ளார் கிம் ஜோங் உன்.
கொள்கைக்கு மாறாக 2 மீற்றருக்கும் குறைவான இடைவெளியில் இருந்து கொண்டு வடகொரிய தலைவரை புகைப்படம் எடுத்ததாலையே அவர் நீக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மட்டுமின்றி அந்த நபர் வடகொரிய தலைவரை பொதுமக்களின் பார்வையில் இருந்து மறைக்கும் வகையில், அவரது முன்னால் நின்றுள்ளார்.
கமெராவில் இருந்து வெளிப்பட்ட வெளிச்சம் கிம் ஜோங் உன் கழுத்தில் பதித்துள்ளது.
முக்கியமாக வடகொரிய தலைவரின் ஒரு பாதி உடல் 3 நொடிகளுக்கு எந்த காட்சியிலும் பதியவில்லை என கூறப்படுகிறது.
இது திட்டமிட்ட சதியாக இருக்கலாம் என கருதிய அதிகாரிகள், உண்மையில் வடகொரிய தலைவருக்கு ஏற்பட்ட இழுக்காகவே குறிப்பிட்டுள்ளனர்.
தீவிர விசாரணைக்கு பின்னர் 47 வயதான அந்த புகைப்பட கலைஞரை வேலையைவிட்டு நீக்கியுள்ளனர்.
மார்ச் மாதம் 12 ஆம் திகதி நடந்த இச்சம்பவத்திற்கு பின்னர் இதுவரை புதிதாக யாரையும் ஆஸ்தான புகைப்பட கலைஞராக நியமிக்கவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.