தேர்தல் நடத்தை விதி அமலுக்கு வந்துள்ளதால் ஒரு தனி நபர் இரண்டு குவட்டர் பாட்டிலுக்கு மேல் வாங்கினால் நீங்கள் தேர்தல் கண்கானிப்பாளரால் கண்காணிக்கபடுவீர்கள். டாஸ்மாக் ஊழியர்கள் 2 பாட்டில்களுக்கு மேல் ஒரு தனி நபருக்கு விற்றால் அவர்கள் சட்டரீதியான நடவடிகைகளுக்கு உள்ளாவீர்கள் என்று டாஸ்மாக் நிர்வாகம் ஆணையின் மூலம் எச்சரித்து உள்ளது.
தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 18 ஆம் தேதி மக்களவை தேர்தல் மற்றும் 18 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் தமிழகம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளது.
தேர்தல் பிரச்சாரங்கள் போது டாஸ்மாக் விற்பனை ஆனது பயங்கரமாக இருக்கும். ஏனெனில் இங்கே காட்சிகளுக்காக உண்மையாக கூடும் கூட்டத்தினை விட, குவார்ட்டருக்காகவும், கோழி பிரியாணிக்காகவும் தான் கூடுவார்கள் என்பது நாடறிந்த செய்தி தான்.
இதனை கவனத்தில் கொண்டே டாஸ்மாக் ஊழியர்கள் 2 பாட்டில்களுக்கு மேல் ஒரு தனி நபருக்கு விற்றால் அவர்கள் சட்டரீதியான நடவடிகைகளுக்கு உள்ளாவீர்கள் என்று டாஸ்மாக் நிர்வாகம் ஆணையின் மூலம் எச்சரித்து உள்ளது.