சாக்கடையில் விழுந்துவிட்டாள்: நித்யா குறித்து பாலாஜி!

நல்லவள் என்று கூறிக்கொள்ளும் நித்யா தைரியம் இருந்தால் எனது மகள் போஷிக்காவை என்னிடம் ஒப்படைக்கட்டும், அவளுக்காகத்தான் எல்லாவற்றையும் பொறுத்துக்கொண்டிருக்கிறேன் என நடிகர் தாடி பாலாஜி கூறியுள்ளார்.

எனது வாழ்க்கையில் நான் இந்த அளவுக்கு வந்துள்ளதற்கு காரணம் எனது கடின உழைப்புதான். ஆனால், எனது பெயரை பார்த்து நித்யா பொறாமைப்படுகிறாள். அவள் தன்னை பிரபலப்படுத்திக்கொள்வதில் பைத்தியமாக இருக்கிறாள்.

நீதிமன்றத்திற்குள் வந்து நித்யா அழுது நடிப்பார். எனது மகள் போஷிகா என்னை பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டாள், பள்ளிக்கு சென்று அவளை நான் பார்க்கிறேன். இல்லை எனது பணம் மட்டும் தான் வேண்டும் என்றால், அனைத்து உதவிகளையும் செய்வதற்கு தயாராக இருக்கிறேன்.

எனது மகளை போர்டிங் பள்ளியில் படிக்க வைத்தால் தால், நித்யாவுக்கு நன்றாக காரில் ஊர்சுற்றுவதற்கு வாய்ப்பாக இருக்கும். மனோஜ் குமாருடன் ஈசிஆர் ரோட்டில் சுற்றிதிரிகிறார்.

மனோஜ் குமாரின் ஆடையை கழற்றாமல் விடமாட்டேன். இதை அவரிடம் நான் நேரடியாக சவால் விடுகிறேன். இரவு 12 மணிக்கு அந்த பொலிஸ் மனோஜ் குமார் எதற்காக நித்யாவிடம் பேசுகிறார்.

இவர்கள் இரண்டு பேருக்கும் தைரியம் இருந்தால், எனது நேரடியாக சந்தியுங்கள். சாக்கடையில் விழுந்து கிடக்கும் நித்யாவால் இனிமேல் எழுந்திருக்க முடியாது. அப்படி எழுந்தாலும் அவரது மேல் வீசும் துர்நாற்றம் போகாது.

ஆடியோ ஆதாரத்துடன் மனோஜ் குமார் குறித்து புகார் அளித்துள்ளேன். ஆனால் அவரை இடமாற்றம் மட்டும் செய்துள்ளனர். இது என்ன பெரிய தண்டனையா? அவரது பணியை விட்டு தூக்க வேண்டும்.

பெண்கள் சமுதாயத்திற்கே நித்யா ஒரு இழுக்கு என தெரிவித்துள்ளார்.