அவளை பழிவாங்க வேண்டும்! இளம் மனைவியின் புகைப்படத்தை தவறாக வாட்ஸ் அப்பில் வெளியிட்ட கணவன்!

பெங்களூர் மாநிலத்தில் 25 வயதான தேஜஸ்வனி என்ற இளம்பெண் தனது புகைப்படத்தை கணவர் பேஸ்புக்கில் வெளியிட்ட காரணத்தால் மனமுடைந்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

தேஜஸ்வினி என்பவருக்கும் 28 வயதான பிரபாகர் என்பவருக்கும் திருமணமாகி சில வருடங்கள் ஆகியுள்ளது. திருமணமான நாள் முதல் வரதட்சணை காரணமாக இரு குடும்பத்தாருக்கும் பிரச்சனை நீடித்து வந்தது.

2016 ஆ்ம் ஆண்டு தனது கணவர் மீது தேஜஸ்வனி அளித்த வரதட்சணை புகார் நீதிமன்றத்தில் நடந்துவந்தது. இந்த வழக்கு விசாரணை காரணமாக ஆத்திரத்தில் இருந்த கணவர், எப்படியாவது தனது மனைவியை மற்றவர்கள் முன்னிலையில் தவறாக சித்தரிக்க வேண்டும் என முடிவு செய்துள்ளார்.

ஒருமுறை சுற்றுலா சென்றபோது தேஜஸ்வினி பீர் பாட்டிலை கையில் வைத்துக்கொண்டு புகைப்படம் எடுத்துள்ளார். அந்த புகைப்படத்தை சமூகவலைதளத்தில் வெளியிட்டு உனது பெயரை கெடுத்துவிடுவேன் என மிரட்டியுள்ளார்.

ஆனால், இதற்கு தேஜஸ்வினி பயப்படவில்லை. பல முறை மிரட்டிய கணவர், ஒரு கட்டத்தில் பேஸ்புக் மற்றும் வாட்ஸ் அப்பில் தேஜஸ்வினியின் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். இதனால் உறவினர்கள் முன்னிலையில் அவமானம் அடைந்த தேஜஸ்வினி 15 தூக்கமாத்திரைகள் மற்றும் கை நரம்பினை அறுத்துக்கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

தற்போது, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் இவர், நடந்தவை குறித்து பொலிசில் வாக்குமூலம் அளித்துள்ளார்.

துன்புறுத்தல் மற்றும் ஏமாற்றுதல் ஆகிய சட்டத்தின் அடிப்படையில் பிரபாகர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது, ஆனால் அவர் தலைமறைவாக உள்ள காரணத்தால் அவரை தேடிவருகிறோம் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.