சிதம்பரத்தைச் சேர்ந்த காங்கிரஸ் முன்னாள் எம்.பி கலியபெருமாள்(85) உடல் நலக்குறைவால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் காலமானார்.
கடலூர் மக்களவைத் தொகுதி முன்னாள் உறுப்பினரும், கடலூர் மாவட்ட காங்கிரஸ் முன்னாள் தலைவருமான பி.பி.கலியபெருமாள் வெள்ளிக்கிழமை (மார்ச் 22) சென்னையில் காலமானார்.
உடல்நலக் குறைபாடு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் அங்கு காலமானார்.
1991-96-ஆம் ஆண்டுகளில் கடலூர் தொகுதி எம்.பி.யாக கலியபெருமாள் இருந்தார்.
அவருக்கு கே.ஜானகி என்ற மனைவியும், ஜே.கே.சித்தார்த்தன் என்ற மகனும், மருத்துவர் கே.செந்தமிழ்செல்வி, கே.லட்சுமிஅருள் ஆகிய மகள்களும் உள்ளனர். மற்றொரு மகளான கே.சஞ்சிதா ஏற்கெனவே காலமாகிவிட்டார்.
கலியபெருமாளுக்கு சிதம்பரம் வடக்கு வீதியில் உள்ள அவரது இல்லத்தில் இன்று (மார்ச் 23) மாலை இறுதிச் சடங்கு நடைபெறுகிறது.