செர்பிய நாட்டில் வசித்து வருபவர் மிலோஞ்சிக்கோ (வயது 74). அதே பகுதியை சார்ந்த பெண்மணி மிளிஞ்சனா போக்தாங்வோவிக் (வயது 21). இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ளாமலேயே வாழ்ந்து வருகின்றனர்.
இதனை சில உறவினர்கள் ஏன் நீங்கள் திருமணம் செய்து கொள்ளக்கூடாது என்று கேட்டதை அடுத்து., இவர்கள் இருவரும் வரும் செப்டம்பர் மாதத்தில் திருமணம் செய்து கொள்ள போவதாக தெரிவித்துள்ளனர்.
இவர்கள் இருவருக்கும் சுமார் 54 வயதுகள் வித்தியாசம் உள்ள நிலையில்., இது குறித்து இணையத்தில் உங்களின் இல்லற வாழ்க்கையில் இன்பத்திற்கு ஏதேனும் மாத்திரைகள் உபயோகம் செய்வீர்களா என்று கேட்டுள்ளனர்.
இதனை கண்ட தம்பதிகள் எங்களின் இல்லற வாழ்க்கையில் ஒரு பிரச்சனையும் இல்லை., என்னை மிக நன்றாக கவனித்து கொள்கிறார் என்று தெரிவித்து வாயடைக்க வைத்துள்ளனர். பிறரின் பேச்சுக்கள் குறித்து எங்களுக்கு எந்த விதமான பிரச்சனையும் இல்லை.
இது குறித்து மிலோஞ்சிக்கோ தெரிவித்தாவது., இந்த வயதிலும் காதல் வலையில் விழுவேன் என்று எண்ணி பார்க்கவில்லை. சிறிய வயதுடைய பெண்ணாக இருந்தாலும் அவருக்கு முடிந்தளவு உதவிகளை செய்வேன் என்று தெரிவித்தார்.
மேலும் மிலோஞ்சிக்கோவிற்கு மூன்று மகன்கள் மற்றும் இரண்டு பேரன்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.