எலும்பு மற்றும் பற்களை பாதுகாக்கும் ஒற்றை காய்!!

உணவுடன் தினமும் 10 கிராம் அளவு கொடுத்ததில் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு குறைந்து வந்ததையும் ஆய்வுகள் தெரியப்படுத்துகின்றன. தினமும் உணவோடு கொத்தவரைப் பசையை சிறிதளவு உண்டு வந்த டைப்-1 சர்க்கரை நோயாளிகளின் சர்க்கரை அளவு குறைந்து வந்ததையும் ஓர் ஆய்வுு உறுதிப்படுத்தியுள்ளது.

எடை குறைக்க உதவும்

கலோரி அளவுகளில் மிக குறைந்த உணவாக இருந்தாலும், வைட்டமின்களையும் மற்றும் தாதுக்களையும் அதிகமாக கொண்டிருக்கும் உணவு இது. ஆகையால் எடையை குறைக்க விரும்புபவர்கள் இதை ஒரு உணவாக சேர்த்துக் கொள்ள வேண்டும். இது தேவையற்ற எடையை குறைக்க உதவும்.

இரத்த சோகையை போக்கும்

இரத்தச் சோகை இருப்பவர்கள் இதை சாப்பிடும் போது அதிக இரத்தம் சுரக்கும். இந்த இரத்த பற்றாக்குறையை நீக்கி உடலை நல்ல நிலைமைக்கு கொண்டு வருகிறது.

புற்றுநோயை தடுக்கும்

கொத்தவரையை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்வதால் ரத்த ஓட்டம் சீர் பெற உதவுகிறது. கொத்தவரையில் உள்ள இரும்புச்சத்து ரத்தத்தில் ஹீமோகுளோபின் உற்பத்தியாகப் பயன்படுகிறது. மேலும் பிராண வாயுவைக் கடத்திச் செல்லும் மருத்துவ வேதிப் பொருட்களை உள்ளடக்கியுள்ளதால் ரத்த ஓட்டம் செம்மையாக நடைபெற உதவுகிறது.

கொத்தவரை செரிமானத்துக்கு மிகவும் உதவியாக விளங்குகிறது. இதில் இருக்கும் Laxatin வேதிப்பொருள் ஜீரணப் பாதையின் செயல்பாட்டை மேம்படுத்துகிறது. இதனால் இரைப்பையில் தங்கிப் புற்றுநோய் வருவதற்குக் காரணமாக இருக்கும் கழிவுகள் வெளியேற்றப்படுகின்றன.

கொலஸ்ட்ராலைக் குறைக்கும்

இதில் உள்ள நார்ச்சத்து உடம்பில் உள்ள தேவையற்ற கொலஸ்ட்ராலைக் குறைக்க உதவுகின்றது. மேலும் அதிக அளவில் உள்ள புரதச்சத்துகள், கார்போஹைட்ரேட்டுகள், தாதுக்கள் மற்றும் கரையக் கூடிய நார்ச்த்துகளை கொண்டிருப்பதால் கொத்தவரங்காய் நமது உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவுகின்றது.

பற்கள் மற்றும் எலும்புகள்

பற்களையும், எலும்புகளையும் பலமாக பாதுகாத்து வைத்துக் கொள்ள உதவுகின்றது.

நோயெதிர்ப்பு சக்தி

கொத்தவரங்காயை உணவில் அதிகம் சேர்த்து வந்தால், அது உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும்.

சரும பிரச்சனைகள்

சருமப் பிரச்சனைகளுக்கு மிகுந்த உதவி செய்கிறது. இதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் சேதமடைந்த திசுக்களை சருமத்திலிருந்து நீக்க உதவுகின்றன. இதனால் கரும்புள்ளிகள், பருக்கள் போன்றவை தடுக்கப்படும்.