இரத்த வெள்ளத்திலும் மகனை எண்ணி துடித்த தாய்.!

புதுச்சேரி மாநிலத்தில் வசித்து வருபவர் ஜெயநாதன் (வயது 50). இவரின் மனைவியின் பெயர் வனஜா (வயது 40). இவர்கள் இருவருக்கும் பன்னீர்செல்வநாதன் என்ற மகன் உள்ளார். ஜெயநாதனுக்கும் வனஜாவுக்கு இடையே அடிக்கடி குடும்பத்தகராறு இருந்து வந்துள்ளது.

இவர்கள் இருவருக்கும் இடையே இருந்த குடும்பத்தகாரரின் காரணமாக கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னதாக கணவரை பிரிந்த வனஜா தனது தாயாரின் இல்லத்தில் வசித்து வந்தார்.

சில நாட்கள் கழித்த பின்னர் மனைவி மனம் மாறி வந்து விடுவார் என்ற எண்ணத்துடன் ஜெயநாதன் இருந்துள்ளார். மனைவி மீண்டும் இல்லத்திற்கு வராததால்., நேற்று அவரது இல்லத்திற்கு சென்று சமாதானம் பேசி வீட்டிற்கு மீண்டும் அழைத்து வந்துள்ளார்.

இவர்களின் மகன் நேற்று கல்லூரிக்கு சென்றுவிட்ட நிலையில்., இருவருக்கும் இடையே வழக்கம் போல தகராறு துவங்கியுள்ளது. இதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில் ஜெயநாதன் வனஜாவை தாக்கவே., பதறிய அவர் வீட்டை விட்டு வெளியேற முயற்சித்துள்ளார்.

அவரை கயிற்றல் கட்டி வைத்து சரமாரியாக குத்தி கொலை செய்துள்ளார். ஆத்திரம் அடங்காமல் சரமாரியாக குத்தி கொலை செய்த அவர்., இருசக்கர வாகனத்தில் இருந்த பெட்ரோலை ஊற்றி உயிருக்கு துடிதுடித்த அவரை எரித்துள்ளார்.

துடிதுடித்த நிலையில் அலறிய அவரின் அலறல் சத்தம் கேட்டு கருகிய புகையையும் கண்டு உடனடியாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலை அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் அவரின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் உடனடியாக ஜெயநாதனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவமானது அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.