வெளிநாட்டு ஊழியர் உயிரும் ஈடு இல்லாத அளவுக்கு முக்கியம்…..

சிங்கப்பூரில் இந்த ஆண்டு தொடங்கி மூன்று மாதங்கள்கூட முழுமையாக முடியாத நிலை யில் கட்டுமான தொழில்துறை விபத்துகளில் ஐந்து பேர் மரணமடைந்து விட்டனர்.

இதை அறிந்து கவலைகொண்டு திடுக் கிட்டுப் போயிருக்கும் சிங்கப்பூர் குத்தகையா ளர்கள் சங்கம், அபாயச் சங்கை ஊதியிருக் கிறது. கட்டுமான நிறுவனங்கள் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை ஒரு சில மணி நேரம் எல்லா வேலைகளையும் நிறுத்திவிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகளை மறுபரிசீலனை செய் யும் நடைமுறை நடப்பில் இருந்து வருகிறது. இந்த நடைமுறையையொட்டி நிறுவனங்கள் அடுத்த மாதம் பாதுகாப்பு பரிசீலனையைச் செய்யவேண்டும். ஆனால் உடனடியாக இப் போதே அந்தப் பரிசீலனையை செய்து ஊழி யர்களின் உயிருக்கு ஆபத்து இல்லாத சூழ் நிலை இருப்பதை உறுதிப்படுத்தும்படி நிறுவ னங்களை இந்தச் சங்கம் கேட்டுக் கொண்டு இருக்கிறது.

கட்டுமான இடங்களில் நிகழ்ந்துள்ள உயிர் பலி விபத்துகளைக் கருத்தில்கொண்டு பார்க்கையில் சங்கத்தின் இந்தக் கோரிக்கை பாராட்டத்தக்கதாகவே தெரிகிறது.

சிங்கப்பூர் ஆயுதப்படைகளிலும் இதே போன்ற ஒரு நடவடிக்கை அண்மையில் இடம்பெற்றது நினைவிருக்கலாம்.
சிங்கப்பூரில் கட்டுமான வேலையிடங்களில் உயிர்பலி விபத்துகள் கணிசமாகக் குறைந்து இருக்கின்றன. அத்தகைய உயிர்பலி விபத்துகள் அறவே இல்லாத நிலையை ஏற் படுத்துவதற்கு நிறுவனங்களுடன் சேர்ந்து அரசாங்கம் அரும்பாடுபட்டு வருகிறது. என்றாலும் இந்த முயற்சியில் விரும்பிய அளவுக்கு பலன் இன்னமும் கிடைக்க வில்லை. மனிதவளத்தை மட்டுமே நம்பி இருக்கும் சிங்கப்பூரில் பணி இடத்தில் ஒருவர் மாண்டாலும் அது பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியதே.

தவிர்த்துக்கொள்ள முடிகின்ற சம்பவங் களில் எதிர்பாரா விதமாக ஒருவர் மாண்டு விடும்போது அவரால் குறிப்பாக அவருடைய குடும்பத்தாருக்கும் உறவினருக்கும் ஏற்படக் கூடிய பாதிப்புகள் கொஞ்சநஞ்சமல்ல.

இதில் சிங்கப்பூரில் வேலை பார்க்கும் வெளிநாட்டுக்காரர்களும் விதிவிலக்கல்ல. அதிக உயிர்பலி விபத்துகள் நிகழ்கின்ற கட்டுமான தொழில்துறையில் கணிசமான வெளிநாட்டினர் வேலை பார்க்கிறார்கள். தங்கள் நாடுகளில் பொருளியல் சூழ்நிலை கள் சரியில்லாத காரணத்தினால் தங்கள் குடும்பத்தை முன்னேற்ற பொருள் ஈட்டுவதற் காக அவர்கள் இங்கு வருகிறார்கள்.

தாய், தந்தையர், மனைவி மக்கள், உற வினர்கள் போன்ற பலரும் அவர்களைச் சார்ந்து அவர்களின் நாடுகளில் இருந்து வரக்கூடிய நிலையும் இருக்கிறது.
இப்படி இருக்கையில் திடீரென்று அத் தகைய வெளிநாட்டு ஊழியர் ஒருவர் விபத் தில் சிக்கி மாண்டுவிட்டால், அதனால் அவ ருடைய குடும்பத்தினருக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகளைச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

கட்டுமான இடங்களில் பாதுகாப்பை உறுதிப்படுத்துங்கள், ஊழியர்களுக்கு ஆபத்துகளை விளைவிக்கக்கூடிய நிலவரங் களைக் கண்டுபிடித்து அவற்றை அகற்றி விடுங்கள் என்று குத்தகையாளர்கள் சங்கம் எப்போதுமே கோரிக்கை விடுத்து வருவது உண்டு. ஆனால் இப்போது அந்தச் சங்கம் விடுத்து இருக்கும் கோரிக்கையை மிக முக்கியமான தாகக் கருதவேண்டும். கட்டுமான நிறுவனங் கள் ஊழியர்களின் பாதுகாப்பில் இன்னும் அதிக கவனத்தைச் செலுத்த வேண்டும்.

கட்டுமானத் திட்டத்தை மேற்கொண்டு வரும் நிறுவனங்கள், அதைக் குறித்த காலத் தில் முடிக்கவேண்டும் என்று பரபரப்பு காட்டு வதுண்டு. ஆனால் இந்த முயற்சியில் ஊழியர் களின் பாதுகாப்பை நிறுவனங்கள் அலட்சியப் படுத்திவிடக்கூடாது. கட்டுமான இடங்களில் பாதுகாப்பையும் இதர நடைமுறைகளையும் மேம்படுத்துவதற்கு நிறுவனங்களிடம் உண்மையான கடப்பாடு இருக்க வேண்டும். தொழில்களில் விபத்து களும் காயமும் மரணமும் தவிர்க்கமுடியா தவை என்ற மனப்போக்கு அறவே மாற வேண்டும்.

வெளிநாட்டு ஊழியர்கள் பணி இடங்களி லும் விபத்துகள் அறவே இல்லாத சூழலை உருவாக்கி, ஒவ்வோர் ஊழியரின் பாதுகாப் பையும் உறுதிப்படுத்த இன்னும் தீவிரமாகச் செயல்படவேண்டும் என்பதைக் கட்டுமான நிறுவனங்கள் தங்கள் இலக்காகக் கொள்ள வேண்டும்.