பெட்டாலிங் ஜெயா: மலேசிய நிறுவனமான ‘கிரேடல் ஃபண்ட்’ டின் தலைமை நிர்வாக அதிகாரி நஸ்ரின் ஹசானை கொலை செய்ததாக அவரது மனைவி, இரு பதின்ம வயது சிறுவர்கள், மற்றொரு மாது ஆகியோர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
இதில் 44 வயது சமிரா முசஃபர், 13 மற்றும் 16 வயதுடைய இரு பதின்ம வயது ஆண்கள் ஆகியோருடன் தலைமறைவாகி உள்ள மற்றொரு மாதின் மீதும் நேற்று நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது.
கடந்த ஆண்டு ஜூன் 13ஆம் தேதி பெட்டாலிங் ஜெயாவில் உள்ள திரு நஸ்ரினின் வீட்டில் அவர் கொலை செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
இந்த வழக்கில் தேடப்பட்டு வரும் மாது அந்த வீட்டில் பணிப் பெண்ணாக வேலை செய்ததாக அறியப்படுகிறது.
குற்றவியல் தண்டனைச் சட்டம், பிரிவு 302இன் கீழ் சுமத் தப்படும் குற்றச்சாட்டு நிரூபிக்கப் பட்டால் மரணத் தண்டனை விதிக் கப்படும்.
குற்றம் சுமத்தப்பட்ட அந்தச் சிறுவர்களின் பெயர்களையோ மற்ற விவரங்களையோ ஊட கங்கள் வெளியிட வேண்டாம் என்று அரசாங்கத் தரப்புத் துணை வழக்கறிஞர் ஜமில் அரிபின் நீதிமன்றத்தைக் கேட்டுக்கொண்டார்.
இந்த வழக்கை உயர்நீதிமன் றத்திற்கு மாற்றிவிடுமாறும் திரு ஜமில் மனுத்தாக்கல் செய்தார்.
திரு ஜமிலின் கோரிக்கைகளை ஏற்று, இந்த வழக்கில் சம்பந்தப் பட்ட சிறுவர்களின் பெயர்களை வெளியிட வேண்டாம் என்று நீதிபதி முகம்மது இக்வான் முகம்மது நசிர் உத்தரவிட்டார்.
குற்றம் சுமத்தப்பட்டவர்களை இரு வழக்கறிஞர்கள் பிரதிநிதித் தனர். மலேசியாவில் தொழில் முனைவர்களை உருவாக்குவதில் ‘கிரேடல்’ நிறுவனம் கவனம் செலுத்துகிறது. வாடகை கார் நிறுவனமான ‘கிராப்’பிற்கு முதற் கட்ட நிதியை இந்த நிறுவனம் தான் வழங்கியது.
திரு நஸ்ரின்-சமிரா தம்ப திக்கு ஒரு மகன் உள்ளார்.
சமிராவுக்கு முந்தைய திரு மணத்தில் மூன்று ஆண் பிள்ளை கள் உள்ளனர். அது போக, திரு நஸ்ரினுக்கு முந்தைய திரு மணத்தில் பிறந்த ஓர் ஆண் பிள்ளையும் இருக்கிறார்.
திரு நஸ்ரினைக் கொலை செய்ததாக சமிரா முசஃபர் (வலது) மீது குற்றஞ்சாட்டப்பட்டது. படம்: ஃபேஸ்புக்/நஸ்ரின் ஹசான்