இந்தியாவில் கடந்த 2008ஆம் ஆண்டு முதல் ஐபிஎல் இந்தியன் பிரீமியர் லீக் தொடர் நடைபெற்று வருகிறது. அதனை தொடர்ந்து இந்த ஆண்டு 12வது ஐபிஎல் தொடர் இன்று முதல் தொடங்குகிறது.
மேலும் இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் முதல் ஆட்டம் தொடங்குகிறது. அதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சேலஞ்ச் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை அணியுடன் மோதுகிறது.
இந்நிலையில் கடந்த வருடம் சென்னையில் ஐபிஎல் போட்டிகள் நடைபெறவிருந்த நிலையில்,கர்நாடக அரசு தண்ணீர் திறந்துவிடாத பிரச்சினை தமிழகத்தில் தலைதூக்கி இருந்தது. அதற்கு ஆதரவாக அரசியல் கட்சிகள், திரை பிரபலங்கள் மற்றும் பல்வேறு அமைப்பினரும் ஐபிஎல் போட்டியை போட்டியை சென்னையில் நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
மேலும் மைதானத்தை சுற்றிலும் பெரும் போராட்டங்கள் நடைபெற்றது
இந்நிலையில் இதனை நினைவுகூர்ந்து நடிகை கஸ்தூரி தனது ட்விட்டர் பக்கத்தில் விமர்சனம் செய்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் போன வருடம் போராடிய தமிழர் நல விரும்பிகள் ஏன் இந்த வருடம் காணோம். ஒருவேளை தமிழ்நாட்டில் காவிரி கரைபுரண்டு ஓடுவதால் கர்நாடகா பெங்களூர் அணியும், தமிழ்நாடு சென்னை அணியும் கிரிக்கெட் ஆடுவதற்கு இப்பொழுது யாருக்கும் ஆட்சேபம் இல்லையோ என பதிவிட்டுள்ளார்.
இன்று #IPL12 விமர்சையாக துவக்கம். போன வருடம் போராடிய தமிழர் நலவிரும்பிகள் ஏன் இந்த வருடம் காணோம்? ஒருவேளை, தமிழ்நாட்டில் காவிரி கரை புரண்டு ஓடுவதால், கர்நாடக பெங்களூரு அணியும் தமிழ்நாடு சென்னை அணியும் கிரிக்கெட் ஆடுவதற்கு இப்பொழுது யாருக்கும் ஆட்சேபமில்லையோ? #cricketPolitics
— Kasturi Shankar (@KasthuriShankar) 23 மார்ச், 2019
இந்நிலையில் இதற்கு ரசிகர்கள் பலரும் மறைமுகமாக வன்முறையைத் தூண்டுவது போல் உள்ளது என கருத்து தெரிவித்து வருகின்றனர்.