மனைவியையும், மனைவியின் தாயையும் கொலை செய்த முன்னாள் இராணுவ அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார்.
திஸ்ஸமஹாராமை – சந்துன்கம பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.இந்தச் சம்பவம் இன்று காலை 9 மணியளவில் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கிராம சேவகராக பணியாற்றிய 25 வயதுடைய பெண்ணும், 54 வயதுடைய அவருடைய தாயாருமே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளனர்.
குடும்ப முரண்பாடு காரணமாக இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளமை பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள 28 வயதுடைய குறித்த நபர், இராணுவத்தில் பணியாற்றியவர் என்றும் பின்னர், அதிலிருந்து வெளியேறியவர் என்றும் விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளது.சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.