2008ஆம் ஆண்டு தொடங்கிய இந்த ஐபிஎல் தொடர், இதுவரை 11 சீசன்கள் நடந்து முடிந்துள்ளது. இன்று நடைபெறும் ஆட்டத்தில் சிஎஸ்கே அணி மற்றும் பெங்களூரு அணிகள் நேரடியாக மோதுகின்றன. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டி மிகவும் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது.
காவிரி போராட்டத்தின் காரணமாக சென்ற வருடம் ஐபிஎல் தொடரின் போது சென்னையில் தமிழக வாழ்வுரிமை கட்சி மற்றும் திருமுருகன் காந்தியின் மே 17 இயக்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புக்கள் சென்னை மைதானத்தில் போராட்டம் நடத்தி பார்வையாளர்களுக்கு இடையூறு ஏற்படுத்தினர்.
ஆனால், இந்த வருடம் அது போன்ற சம்பவங்கள் ஏதும் நடைபெறவில்லை. இதனை சுட்டிக்காட்டும் விதமாக நடிகை கஸ்தூரி தனது ட்வீட்டர் பக்கத்தில், ” இன்று #IPL12 விமர்சையாக துவக்கம். போன வருடம் போராடிய தமிழர் நலவிரும்பிகள் ஏன் இந்த வருடம் காணோம்?
இன்று #IPL12 விமர்சையாக துவக்கம். போன வருடம் போராடிய தமிழர் நலவிரும்பிகள் ஏன் இந்த வருடம் காணோம்? ஒருவேளை, தமிழ்நாட்டில் காவிரி கரை புரண்டு ஓடுவதால், கர்நாடக பெங்களூரு அணியும் தமிழ்நாடு சென்னை அணியும் கிரிக்கெட் ஆடுவதற்கு இப்பொழுது யாருக்கும் ஆட்சேபமில்லையோ? #cricketPolitics
— Kasturi Shankar (@KasthuriShankar) March 23, 2019
ஒருவேளை, தமிழ்நாட்டில் காவிரி கரை புரண்டு ஓடுவதால், கர்நாடக பெங்களூரு அணியும் தமிழ்நாடு சென்னை அணியும் கிரிக்கெட் ஆடுவதற்கு இப்பொழுது யாருக்கும் ஆட்சேபமில்லையோ?” என கேட்டு பதிவிட்டுள்ளார்.