நாகர்கோவிலை சேர்ந்தவர் எஸ்.சரவணமுத்து. 45 வயது நிறைந்த இவர் வெல்டிங் பட்டறை ஒன்றில் ஊழியராக பணியாற்றி வருகிறார்.
இவர் வயதானவர்கள் மற்றும் நோய்வாய்ப்பட்டு நடமாட முடியாமல் படுத்த படுக்கையாக இருப்பவர்களுக்காக ரிமோட் படுக்கை ஒன்றை கண்டுபிடித்துள்ளார்.
தற்போதைய காலகட்டத்தில் நடமாட முடியாமல் அவதிப்படுபவர்களை அனைவரும் சுமையாக கருதும் சூழ்நிலை உருவாகியுள்ளது. மேலும் அவர்களுக்கு பணிவிடை செய்தவற்கு கூட பலருக்கு மனம் இருப்பதில்லை. இந்நிலையில் இத்தகைய பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் சரவணமுத்து ரிமோர்ட் படுக்கையை கண்டுபிடித்துள்ளார்.
இந்த படுக்கையை பயன்படுத்துவர்கள் படுக்கையில் இருந்தவாறே இயற்கை உபாதைகளை,கழித்துவிடமுடியும். இதில் ரிமோட்டை பயன்படுத்தி, படுகையின் நடுப்பகுதியை திறக்கலாம். பிறகு இயற்கை உபாதைகளை கழித்துவிட்டு, ரிமோட் மூலமே பிளஷ் செய்யலாம். இதற்கு படுக்கையுடன் இணைக்கப்பட்டிருக்கும் குழாயை செப்டிக் டேங்குடன் இணைத்தால் மட்டும் போதும்.
இந்நிலையில் ‘நேஷனல் இன்னோவேஷன் பவுண்டேஷன்’ என்ற அமைப்பு அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் சிறந்த கண்டுபிடிப்புகளை தேர்வு செய்து பரிசு வழங்கி வரும்நிலையில் இந்த ஆண்டு இந்த கண்டுபிடிப்புக்கு இரண்டாவது பரிசு வழங்கி உள்ளது.
மேலும் இதற்கு இந்தியா முழுவதிலும் இருந்து பல ஆர்டர்கள் வருவதாக சரவண முத்து கூறியுள்ளார்.