பெண்களின் கல்விக்காக நிதி திரட்ட, மாரத்தான் போட்டியில் பிரபல நடிகை.!

தமிழ் சினிமாவில் பருத்திவீரன் படத்தின் மூலம் ரசிங்கர்களிடையே பெருமளவில் பிரபலமானவர் நடிகை ப்ரியாமணி. அதனை தொடர்ந்து பல படங்களில் நடித்த அவர் ஒரு காலத்தில் முன்னணி நடிகையாக திகழ்ந்தார்.

மேலும் அவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, ஹிந்தி படங்களிலும் நடித்துள்ளார்.
அதனை தொடர்ந்து நடிகை ப்ரியாமணி தனது காதலர் முஷ்தபா ராஜ்-ஜை திருமணம் செய்து கொண்டு சினிமாவில் இருந்து விலகினார். மேலும் தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நடன நிகழ்ச்சிக்கு நடுவராக உள்ளார்.

இதனை தொடர்ந்துஅவர் மாதவிலக்கு, சுகாதாரம் ஆகிய காரணங்களால் மாணவிகள் பலரும் படிப்பைப் பாதியிலேயே நிறுத்தி விடும் நிலைமை இன்றும் தொடர்வதால், அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பள்ளியில் இருங்கள் என்ற பிரச்சாரத்தில் அவர் ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில், ப்ரியாமணி தற்போது பெண் கல்விக்காக நிதி திரட்டுவதற்காக வரும் மே மாதம் 19ம் தேதி பெங்களூருவில் நடக்கும் மாரத்தான் போட்டியில் கலந்து கொள்ளவுள்ளார்.

மேலும் இது குறித்து ப்ரியாமணி கூறியதாவது, பெரும்பாலான பள்ளிகளில் சரியான டாய்லெட் வசதி இருப்பதில்லை, மேலும் மாதவிலக்கு சுகாதார பிரச்சினை போன்றவற்றால் மாணவிகள் பலரும் தங்களது படிப்பை பாதியிலேயே நிறுத்தி விடுகின்றனர்.

அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவது ஒரு பெண்ணாக என் கடமை. மேலும் அதனால், இந்த மாரத்தான் போட்டியில் கலந்துகொள்ளவுள்ளேன். இதற்கு பலரும் ஆதரவு அளிக்கவேண்டும் என ப்ரியாமணி கேட்டுக்கொண்டுள்ளார்.