பிரித்தானியாவில் கொலை, கொள்ளை வழக்கில் பல ஆண்டுகளாக தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளி ருமேனியா நாட்டில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
Shane O’Brien என்ற பிரித்தானியர் 2015 ஆம் ஆண்டு 21 வயதான ஜோஸ் ஹான்சன் என்ற நபரை குத்தி கொலை செய்துள்ளார். கொலை மட்டுமல்லாது கடத்தல் சம்பங்களிலும் தொடர்ந்து ஈடுபட்டு வந்துள்ளார்.
இந்த கொலை சம்பவத்தில் இவரை பொலிசார் தேடி வந்த நிலையில், தனி ஜெட் விமானம் மூலம் நாடுகடந்து சென்றுள்ளார். துபாய், நெதர்லாந்து போன்ற நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டு பல பெண்களுடன் தொடர்பு, இரவு நேர கேளிக்கை விடுதிகள், ஜிம்னாஸ்டிக் என பொழுதை கழித்துள்ளார்.
இவரை கண்டுபிடித்து கொடுப்பவர்ளுக்கு £50,000 புவுண்ட் சன்மானம் வழங்கப்படும் என பிரித்தானிய காவல்துறை அறிவித்து இவரது புகைப்படத்தை உலக நாடுகளின் குற்றவியல் அதிகாரிகளுக்கு அனுப்பிவைத்தது.
இந்நிலையில், இன்று ரோமானிய நாட்டில் வைத்து இவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து National Crime Agency’s (NCA’s ) தலைவர் இயன் குரூஸ்டன் கூறுகையில், பல நாடுகளில் சுற்றிதிரிந்த இவர், தனது தோள்பட்டையில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக அறுவை சிகிச்சை மையத்தில் சிகிச்சை மேற்கொண்டுள்ளார்.
ருமேனிய அதிகாரிகளுடன் நெருக்கமாக பணியாற்றுவதன் காரணமாக, இவரை கண்டுபிடித்துள்ளது மகிழ்ச்சியாக இருக்கிறது.
இவனது கைது, 2015 ஆம் ஆண்டில் கொலை செய்யப்பட்ட ஜோஸ் ஹான்சன் குடும்பம் மற்றும் நண்பர்களுக்கு ஆறுதலாக இருக்கும் என நம்புகிறேன் என தெரிவித்துள்ளார்.