“கோலி தோற்க இது தான் காரணம்” குழப்பத்தை உருவாக்கும் ஹர்பஜன் சிங்!!

உலக அளவில் புகழ்பெற்ற மிகப்பெரிய 20 ஓவர் போட்டி தொடரான ஐபிஎல் தொடரின் 12வது சீசன் நேற்று சென்னை சேப்பாக்கம் சிதம்பரம் ஸ்டேடியத்தில் தொடங்கியது. வழக்கமாக ஐபிஎல் போட்டிகள் தொடங்குவதற்கு முன்னர் நடைபெறும் தொடக்க விழா மிக பிரமாண்டமாக நடைபெறும்.

ஆனால் இந்த வருடம் அந்த தொடக்க விழாவிற்கு செலவு ஆகும் 20 கோடி ரூபாயையும் அன்மையில் தீவிரவாதிகளால் உயிரிழந்த இந்திய துணை ராணுவ வீரர்களுக்கு அவர்களின் குடும்பங்களுக்கு நிதியாக அளிப்பதாக ஐபிஎல் நிர்வாகம் அறிவித்தது. இந்த நிலையில் நேற்று நடைபெற்ற முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மல்லுக்கட்டின.

இதில் டாஸ் வென்ற சிஎஸ்க்கே அணி பவுலிங்கை தேர்வு செய்தது. பெங்களூர் அணி 70 ரன்களில் ஆலவுட் ஆக பின்னர் சிஎஸ்க்கே 7 ஓவர் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதுகுறித்து, சென்னை அணி கேப்டன், ” இந்த ஸ்டேடியம் அதிக ரன்களை அடிக்க எதுவாக இல்லை. இதை நாங்கள் எதிர்பார்க்கவில்லை . பொதுவாக ஐபிஎல்லில் அதிக ரன்களை அடிக்க வேண்டியிருக்கும்.

இவ்வாறு, மோசமான ஸ்டேடியத்தில் பந்துகளை எதிர்கொள்வது சிரமம். முதலில் நாங்கள் பேட்டிங்கை தேர்வு செய்து இருந்தால் நிலைமை தலைகீழாக இருக்கும்.” என தெரிவித்துள்ளார். இவ்வாறு அவர் பெங்களூர் அணியின் தோல்விக்கு ஸ்டேடியம் தான் காரணம் என தெரிவித்து இருக்கையில்.

சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் தனது ட்வீட்டர் பக்கத்தில்,” அடி கொஞ்சம் ஓவரோ?” என பெங்களூரு அணியை கிண்டல் செய்து பதிவிட்டுள்ளார். சக விளையாட்டு வீரர்களிடையே இது குழப்பத்தை உண்டு பண்ணும் என கருதப்படுகிறது.