– பி.கே.பாலச்சந்திரன் –
இலங்கை உள்நாட்டு போரின் இறுதிக் கட்டங்களில் இடம்பெற்றதாகக் கூறப்படுகின்ற போர்க்குற்றங்களை விசாரணை செய்வதற்கான உத்தேச நீதிச் செயன்முறையில் பணியாற்றுவதற்கு வெளிநாட்டு நீதிபதிகளை அழைப்பதை தடுக்கும் ஏற்பாடு எதுவும் நாட்டின் அரசியலமைப்பில் இல்லை என்று பாராளுமன்றத்தில் தமிழரசுக் கட்சியின் யாழ்ப்பாண மாவட்ட எம்.பி.யும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் செய்த வாதம் அரசாங்கத்தை தடுமாற்றத்திற்குள்ளாக்கக் கூடியதாகும். அத்துடன் அவரை எதிர்க்கின்ற தமிழ் அரசியல்வாதிகளையும் அது ஓரங்கட்டும் வாய்ப்பு இருக்கின்றது.
இலங்கை நீதிமன்றங்களுக்கு வெளிநாட்டு நீதிபதிகளை நியமிப்பதற்கு அரசியலமைப்பு தடையே அல்ல என்று சுமந்திரன் குறிப்பிட்டிருந்தார். இலங்கை நீதிமன்றங்களில் பணியாற்றுவதற்கு வெளிநாட்டு நீதிபதிகளையும் சட்டத்தரணிகளையும் அனுமதிப்பதற்கு இலங்கையின் அரசியலமைப்பு இடம்தரவில்லை எனவும் அவ்வாறு அனுமதிப்பதனால் பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஆதரவுடன் ஒரு திருத்தத்தை கொண்டுவந்து அதற்கு சர்வஜன வாக்கெடுப்பின் மூலம் மக்களின் அங்கீகாரத்தையும் பெற வேண்டும் என்று மார்ச் 21 ஆம் திகதி ஜெனீவாவில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் அரசாங்கத்தினால் தெரிவிக்கப்பட்ட நிலைப்பாட்டுக்கு பதிலளிக்கும் முகமாகவே சட்டவல்லுனரான சுமந்திரனின் பாராளுமன்ற உரை அமைந்தது.
அரசியலமைப்பின் 105 வது சரத்து எந்த தடையையும் விதிக்கவில்லை . மேல் நீதிமன்றம் தொடர்பிலான 111 வது சரத்து நீதிபதிகள் எந்த நாட்டவராக இருக்க வேண்டும் என்பது தொடர்பில் எந்த தடையையும் விதிக்கவில்லை. வெளிநாட்டு நீதிபதிகள் பங்கேற்பதை அரசியலமைப்பு தடைச்செய்கின்றது என்ற கூறுவது தவறானதாகும்.அது தடைசெய்யவே இல்லை. இது தொடர்பில் நீதித்துறையின் தீர்மானங்களும் இருக்கின்றன. இந்தியா மற்றும் பாகிஸ்தானின் அரசியலமைப்பில் உள்ளதைப் போலன்றி இலங்கையின் அரசியலமைப்பு நீதிபதிகளை நியமிக்கும் செயற்பாடுகளின் தகுதி அல்லது கட்டுப்படுத்தும் தன்மை பற்றி எந்தவித வழிகாட்டல் விதிமுறைகளையும் கொண்டிருக்க வில்லை என்று சுமந்திரன் தனது உரையில் தெரிவித்தார்.
வெளிநாட்டு நீதிபதிகள் தொடர்பில் முன்னாள் நீதியமைச்சர் விஜேதாஷ ராஜபக்ஷ வெளிப்படுத்திய ஆட்சேவம் குறித்து கருத்து தெரிவித்த சுமந்திரன் வெளிநாட்டு நீதிபதிகள் சம்பந்தப்பட்ட பிரச்சினை ஆராயப்பட்ட போது தானும் அவரும் ஜெனீவாவில் இருந்ததை நினைவு படுத்திய இலங்கை நீதிமன்றமொன்றில் வெளிநாட்டு நீதிபதிகளை நியமிப்பதற்கு தடையெதுவும் இல்லையென்பதை அவர் ஒத்துக் கொண்டிருந்தார் என்று கூறினார். விஜேதாச ராஜபக்ஷவின் இணக்கப்பாட்டிற்கு பின்னர் தான் ஜக்கிய நாடுகள் மனித உவுரிமைகள் பேரவையின் 30/1 தீர்மானத்தில் இலங்கை அரசாங்கம் கைச்சாத்திட்டது என்றும் சுமந்திரன் பாராளுமன்றத்தில் சுட்டிக்காட்டினார்.
வெளிநாட்டு நீதிபதிகளை இலங்கை நீதிமன்றங்களில் அனுமதிப்பதற்கு வகை செய்யும் நோக்கில் 2013 ஆம் ஆண்டு விஜேதாச ராஜபக்ஷ பாராளுமன்றத்தில் தனிநபர் பிரேரணை ஒன்றை சமர்பித்ததை நினைவுப்படுத்தியதுடன் சுமந்திரன் தனது செயல் அரசியலமைப்புக்கு முரணானது என ராஜபக்ச நினைத்திருந்தால் அவ்வாறு செய்திருப்பாரா? என்று கேள்வியையும் எழுப்பினார்.
மேலும் நீதிச் செயன்முறையில் வெளிநாட்டு நீதிபதிகள் இணைவதற்கு வாய்ப்பில்லையென்றால் எதற்காக 2015 ஒக்டோம்பர் 30/1 தீர்மானத்திற்கு இலங்கை அரசாங்கம் இணை அனுசரனை வழங்கியது? வெளிநாட்டு நீதிபதிகள் தொடர்பிலான ஏற்பாடுகளை ஜெனீவா தீர்மானம் எப்போதுமே உள்ளடக்கியிருந்தது என்று கூறப்பட்டிருந்த போதிலும் எதற்காக மேலும் இருதடவைகள் இலங்கை அரசாங்கம் இணை அனுசரனை வழங்கியது? என்று சுமந்திரன் கேள்வியெழுப்பி வாதிட்டார்.
வெளிநாட்டு நீதி நியாயாதிக்கம்
வெளிநாட்டு நீதிபதிகளுக்கு இடமில்லை என்ற நிலைப்பாட்டிலேயே இலங்கை அரசாங்கம் தொடர்ந்தும் உறுதியாக இருக்குமானால் இலங்கை விவகாரத்தை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லுமாறு சர்வதேச சமூகத்தை கேட்பதைத் தவிர தமிழர்களுக்கு வேறு வழியிருக்கப் போவதில்லை என்று சுமந்திரன் எச்சரிக்கையும் விடுத்தார்.
சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் சட்டமாக இருக்கின்ற ரோம் சட்டத்தில் இலங்கை கைச்சாத்திடாமல் எவ்வாறு இதைச் செய்ய முடியும் என்று சுமந்திரனிடம் கேட்ட போது சர்வதேச நீதிமன்றமொன்றிற்கு உத்தரவிடுமாறு பாதுகாப்பு சபையை சர்வதேச சமூகம் கேட்க முடியும். இத்தகையதொரு நடவடிக்கைகெதிராக பாதுகாப்பு சபையை சீனா அல்லது ரஷ்யா வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்துமேயானால் சர்வதேச விசாரணை மன்றம் ஒன்றை அமைப்பதற்கான வேறு வழிமுறைகளை ஆராய முடியும் என்று பதிலளித்தார்.
‘ஒரு விடயத்தை தெளிவுப்படுத்த நான் விரும்புகிறேன். இலங்கை அரசாங்கம் இந்த உறுதி மொழிகளை மூன்று தடவைகள் எழுத்தில் வழங்கியிருக்கின்றது. ஆனால் நீதிச் செயன்முறையில் சுயாதீனமான வெளிநாட்டு நீதிபதிகள் தமிழ் படுத்தப்பட்ட உறுதிமொழி உட்பட இந்த உறுதி மொழிகளை கடைப்பிடிக்க அரசாங்கம் தவறுமேயானால்அதற்கு பிறகு தமிழ் மக்களாகிய நாம் முற்றிலும் சர்வதேச நீதி செயன்முறையொன்றை நோக்கி நகர்வதை தவிர வேறு மாற்று வழி எமக்கில்லாமல் போகும். அதுவே சாத்தியமானதே எமது மக்கள் அதையே கேட்டுக்கொண்டிருக்கிறார்கள் . சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு இலங்கை விவகாரத்தை பாரப்படுத்தும்படி எமது மக்கள் கூறுகிறார்கள்.நாங்கள் கலப்பு நீதிச் செயன்முறையொன்றையே வீம்புகிறோம். எழுத்து மூலமாக வழங்கிய உறுதி மொழிகளுக்கு மத்தியிலும் அதுவும் அரசியலமைப்பின் கீழ் அவ்வாறு செய்வது சாத்தியம் என்று இருக்கின்ற போதிலும் அரசாங்கம் அதை செய்யவில்லையானால் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு அல்லது வேறு வகையான முற்றிலும் சர்வதேச நீதி செயற்முறைக்கு இலங்கை விவகாரத்தை நகர்த்துவதற்கு நடவடிக்கைகளை எடுப்போம் என்பதை அரசாங்கத்திற்கும் நாட்டிற்கும் இன்று நான் அறிவிக்கின்றேன்:. என்று சுமந்திரன் பாராளுமன்றத்தில் கூறினார்.
‘ ஜெனீவாவில் வெளிவிவகார அமைச்சர் கூறிய வார்த்தைகள் நடைமுறையில் கைகூட வேண்டுமானால் நாட்டுக்குள்ளே நல்லிணக்கத்திற்கான செயன்முறைகளை நாம் கண்டுப்பிடிக்க வேண்டும். அவ்வாறானால் வழங்கிய உறுதிமொழிகளை அரசாங்கம் உறுதியாக பின்பற்றி நடைமுறைப்படுத்த வேண்டும். வெளிநாட்டு நீதிபதிகளின் பங்கேற்பின் ஊடாக மாத்திரமே சுயாதீனமான செயன்முறையை உறுதிப்படுத்த முடியும். முரண்நிலையில் இருக்கின்ற தரப்புகளில் அல்லது போரில் ஈடுபடுகின்ற தரப்புகளில் ஒரு தரப்பு இலங்கை அரசாகவும், மறுதரப்பு நாட்டை பிரிப்பதை இலக்காக கொண்டு தீவிரவாத குழுவாகவும் இருக்கின்ற விவகாரம் ஒன்றில் இலங்கை அரசு சுயாதீனமான மத்தியஸ்தராக இருக்க முடியாது. சுயாதீனமான நீதிச் செயன்முறை ஒன்று குறித்து எவருமே குறை கூற முடியாது. என்ற காரணத்தினால் தான் வெளிநாட்டு நீதிபதிகள் பங்குபற்ற வேண்டும் என்று நாம் கேட்கின்றோம். அத்தகைய ஒரு செயன்முறை பின்பற்றப்படவில்லையானால் சர்வதேச சமூகத்திற்கு வழங்கிய உறுதிமொழிகள் அனைத்தும் மீறப்படுகின்றன என்றாகிறது. அதற்கு பிறகு முற்றிலும் சர்வதேச விசாரணை மமன்றமொன்றிற்கே நாடு முகம் கொடுக்க வேண்டியிருக்கும்”. எனவும் சுமந்திரன் எச்சரித்தார்.
ஐக்கிய தேசிய கட்சிக்கு அசௌகரியம்
வெளிநாட்டு நீதிபதிகளை சம்பந்தப்படுத்துவதற்கு சட்டரீதியாக இடமில்லை என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும், வெளிவிகார அமைச்சர் திலக் மாரப்பன பகிரங்கமாக கூறியிருப்பதால் சுமந்திரனின் வாதம் ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கத்திற்கு பெறும் அசௌகரியத்தை தோற்றுவிக்கக் கூடியதாக இருக்கின்றது. மேற்குலக நாடுகளின் தலைமையிலான ஐ. நா மனித உரிமைகள் பேரவையின் முன்னாள் இப்போது தங்களின் வாதத்தை முன்வைக்க முடியாமல் போகும்.
இலங்கையில் போர்குற்றங்கள் ஏதும் இழைக்கப்படவில்லை என்பது அரசாங்கத்தின் நிலைப்பாடாக இருக்கின்றது. இந்நிலைப்பாட்டிற்கு சேதமில்லாத வகையில் வெளிநாட்டு நீதிபதிகளை ஈடுப்படுத்துவதற்கு அரசாங்கம் வழிவகைகளை கண்டறிய வேண்டியிருக்கலாம். அல்லாது விட்டால் ஒரு மாற்று வழியாக இலங்கை அரசாங்கத்தின் சம்மதத்துடன் மாத்திரமே ஐ. நா நடடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று ஜெனீவா தீர்மானித்தில் ஏற்பாடு ஒன்றின் கீழ் அரசாங்கம் தஞ்சம் தேடிக்கொள்ள கூடும். அதனால் வெளிநாட்டு நீதிபதிகளை நியமிப்பதற்கான எந்தவொரு யோசனைக்கும் இலங்கை இணக்கத்தைத் தெரிவிக்க வேண்டிய தேவையில்லை.
தமிழர் அரசியல் மீதான தாக்கம்
சுமந்திரனின் பாராளுமன்ற பேச்சு வடக்கு , கிழக்கு மாகாணங்களில் வாழ்கின்ற தமிழர்களின் தேர்தல் தெரிவு மீது தாக்கம் ஒன்றினைக் கொண்டிருக்க முடியும். 2019ம் ஆண்டில் இரண்டாம் அரை கூறிலும், 2020ம் ஆண்டின் முதலாம் அரைகடகூறிலும் ஜனாதிபதி தேர்தல், பாராளுமன்ற தேர்தல், மாகாண சபை தேர்தல் என்று முக்கிய தேர்தல்கள் வரிசையாக வரவிருக்கின்றன. முன்னாள் போர் வலயமான இலங்கையின் வட, கிழக்கில் உள்ள சலக தமிழ் அரசியல் கட்சிகளுமே வெளிநாட்டு நீதிபதிகளையும், வழக்கு தொடுநர்கள் மற்றும் வழக்கறிஞர்களை கோரி நிற்கின்றனர். இனவாத அடிப்படையில் இலங்கை பாதுகாப்பு படைகளுக்கு சபார்பாகவே இலங்கையின் நீதித்துறை செயற்படும் என்ற அச்சம் காரணமாகவே இந்த கோரிக்கையை தமிழ் கட்சிகள் முன்வைத்து வருகின்றன. அதனால் வெளிநாட்டு நீதிபதிகள் நியமனத்தை விதத்துரை செய்கின்ற 2015 ஜெனீவா தீர்மானத்தை சகல தமிழ் கட்சிகளுமே ஆதரிக்கவும் செய்கின்றன.
ஆனால் இலங்கை தமிழரசு கட்சியின் சுமந்திரன் மாத்திரமே அரசியலமைப்பினதும், இலங்கையின் சட்டத்தினதும் அடிப்படையில் அந்த கோரிக்கையை நியாயப்படுத்தி வாதிட்டு இலங்கை அரசாங்கம் நழுவி செல்வதை கஷ்டமாக்கியுள்ளார்.தற்போது தொடங்கி 2020 நடுப்பகுதி வரையிலான காலகட்டத்தில் மாகாண சபை தேர்தலும், பாராளுமன்ற தேர்தலும் அறிவிக்கப்படும் போது சுமந்திரனால் முன்னிலைப்படுத்தப்பட்ட இந்த வாத தமிழரசு கட்சி வல்லமை வாய்ந்த ஒரு பிரச்சாரக் கருவியாக மாறக் கூடிய வாய்ப்பு இருக்கின்றது இது தமிழரசு கட்சி தமிழ் மக்களுக்காக போராடுகின்ற துணிச்சலை இழந்து இன்று ஆளும் ஐக்கிய தேசிய கட்சியின் கைப்பாவையாக ஆகிவிட்டது என்று போட்டி தமிழ் கட்சிகள் முன்வைக்கின்ற குற்றச்சாட்டை நிரூமூலம் செய்கின்றது.