சுழற்சி முறையிலான மின்சார விநியோக தடை நாளை (25) முதல் அமுலுக்கு வரும் என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.
இதேவேளை, இந்த மின் தடை 10 நாட்களுக்கு தொடரும் என மின் சக்தி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலைமையை சீரமைப்பதற்கு பொது மக்களும் தங்களது ஒத்துழைப்பை நல்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
பயன்பாட்டில் உள்ள குளிரூட்டிகளில் ஒன்றை தற்காலிகமாக செயற்படுத்தாமல் நிறுத்தி வைக்குமாறும், பயன்பாட்டில் உள்ள மின் விளக்குகள் இரண்டை அணைத்து வைக்குமாறும் பொது மக்களிடம் வேண்டுகோள் விடுகின்றேன் எனவும் அமைச்சர் மேலும் கூறினார்.
இதன்படி, பகல் நேரங்களில் காலை : 8.30 – 11.30 வரை, காலை : 11.30 – 2.30 வரை, மதியம் : 2.30 – 5.30 வரை என்றும், இரவு நேரங்களில் மாலை : 6.30 – 7.30 வரை, இரவு : 7.30 – 8.30 வரை, இரவு : 8.30 – 9.30 வரை என்றும் மின் தடை அமுல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்சியாக நாட்டில் நிலவி வரும் வறட்சியான காலநிலையினால் இவ்வாறு மின்வெட்டு அமுல்படுத்தப்பட வேண்டிய நிலைமை உருவாகியுள்ளது என இலங்கை மின்சாரசபை தெரிவித்துள்ளது.