மைத்திரியை மீண்டும் ஜனாதிபதியாக்குவதே எமது நோக்கம் : அங்கஜன்

(தி.சோபிதன்)

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஊடாக மைத்திரிபால சிறிசேனவை மீண்டும் ஜனாதிபதியாக்குவதே எமது கடசியின் நோக்கம் என பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்தார்.

சுதந்திரக் கடசியின் மறுசீரமைப்பு செயற்திட்ட மகாநாடு யாழ்ப்பாணத்தில் உள்ள மண்டபத்தில் நேற்று இடம்பெற்றது.

இதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

இலங்கையின் ஜனாதிபதியும் சுதந்திரக் கட்சியின் தலைவருமான மைத்திரிபால சிறிசேன கடசிக்கான புதிய செயலாளராக தயாசிறி ஜயசேகரவை அண்மையில் நியமித்தார்.

இந்நிலையில் அவர் முதன்முறையாக யாழ்ப்பாணத்துக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ளார். நாட்டில் அடுத்த ஜனாதிபதி தேர்தல் ஒன்று இடம்பெறும் போது எமது கட்சியை பலப்படுத்தும் நோக்கில் மைத்திரியும் கடசியின் செயலரும் பல நகர்வுகளை முன்னெடுத்துள்ளனர்.

அதன் ஓர் அங்கமாகவே நாம் யாழ்ப்பாண தேர்தல் தொகுதியான யாழ்ரூபவ்கிளிநொச்சி பிரதேச கட்சி ஆதரவாளர்களை அழைத்து அவர்களுக்கு ஊக்குவிப்பினை வழங்க தீர்மானித்தோம்.நாம் ஜனாதிபதி தேர்தலில் மக்களின் பெரும்பான்மையான வாக்குகளை பெற்று ஆடசியமைக்க வேண்டும். எங்களின் ஆடசியில் நாட்டின் அனைத்து மக்களுக்கும் உரிமையையும் சுதந்திரத்தையும் முழுமையாக பெற்றுக்கொடுக்க வேண்டும்.

சுதந்திரக் கடசி மூவின மக்களையும் ஒன்றிணைத்த கட்சியாகும்.

வடக்கில் உள்ள மக்களின் பிரச்சனைகளை தீராப்பதாக பொய்களை கூறி மக்கள் பிரதிநிதிகளாக இருக்கின்றவர்களினால் என்ன சாதிக்க முடிந்தது. எமது பிரச்சனைகளை ஜெனிவா ஊடாக தீர்க்க போகின்றோம் என கூறியவர்கள் அங்கு எதுவும் நடக்கவில்லை என்றதும் வாயடைத்துள்ளனர்.

அதுமட்டுமன்றி வெளியில் அவர்கள் அரசுக்கு எதிரானவர்கள் என காட்டிக் கொண்டாலும் அரசின் பிரதிநிதிகளாகவே செயற்படுகின்றனர் என்றார்.