திடீரென விலகிய முக்கிய புள்ளி!! ஸ்டாலின் நினைத்து ஒன்று, ஆனால் நடந்தது ஒன்று!

கொலையுதிர் காலம் படத்தின் செய்தியாளர் சந்திப்பில் பேசிய நடிகர் ராதாரவி, நயன்தாரா பற்றி சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்துள்ளார்.

சினிமாத்துறையில் எம்.ஜி.ஆர், சிவாஜி போன்றவர்கள் எல்லாம் ஒரு லெஜண்ட் ஆவார்கள். அவர்கள் சாகா வரம் பெற்றவர்கள். அவர்களுடன் எல்லாம் நயன்தாராவை ஒப்பிடுவது மிகவும் வருத்தமாக உள்ளது. நயன்தாரா நல்ல நடிகை, இவ்வளவு நாள் திரையுலகில் நிலைப்பதே பெரிய விஷ்யதான் அவரைப் பற்றி வராத செய்தியே கிடையாது. அதெல்லாம் தாண்டி நிற்கிறார்கள். அவரது கருத்துக்கு நயன்தாராவின் காதலனான, இயக்குனர் விக்னேஷ் சிவன் உள்ளிட்ட பல பிரபலங்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்த சர்ச்சைக்குரிய கருத்தாக நடிகர் ராதாரவி திமுகவில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டார். இதற்கான அறிவிப்பை திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் வெளியிட்டார். அவர் தனது அறிக்கையில், நடிகர் ராதாரவி கழக கட்டுப்பாட்டை மீறியும் கழகத்திற்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் பேசி வருவதால், திமுகவின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் அவர் தற்காலிகமாக நீக்கி வைக்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.

நடிகர் ராதாரவியின் சர்ச்சைக்குரிய கருத்தாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள டுவிட்டர் கணடனத்தை பதிவு செய்துள்ளார்.

இந்நிலையில், நான் பேசியது உங்கள் மனதை புன்படுத்தி இருந்தால் அதற்காக எனது வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன் என்று நடிகை நயன்தாரா மற்றும் இயக்குநர் விக்னேஷ் சிவனுக்கு, நடிகர் ராதாரவி விளக்கம் அளித்துள்ளார். மேலும், திமுகவில் இருந்து தானே விலகி கொள்வதாகவும் ராதாரவி அறிவித்துள்ளார்.