மும்பையில் இருந்து நேற்று முன்தினம் சென்னை மீனம்பாக்கம் உள்நாட்டு விமான நிலையத்துக்கு நள்ளிரவு விமானம் ஒன்று வந்தது. அதில் மும்பையை சேர்ந்த தொழில் அதிபர் ராகேஷ் மோகன் வர்மா என்பவர் பயணித்துள்ளார். அவர் அமர்ந்திருந்த இருக்கைக்கு அருகே மும்பையை சேர்ந்த பெண் ஒருவர், தனது குழந்தையுடன் பயணம் செய்துள்ளார்.
விமானத்தில் பயணம் செய்தபோது ராகேஷ் மோகன்வர்மா தனது செல்போனில் ஆபாச படம் பார்த்ததாகவும், அருகில் இருந்த பெண் பயணியிடம் சில்மிஷம் செய்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண், விமான பணிப்பெண்களிடம் புகார் அளித்துள்ளார்.
இதனையடுத்து விமான பணிப்பெண்கள் அந்த தொழில் அதிபரை எச்சரித்ததுடன், அவருக்கு வேறு இருக்கையும் மாற்றி கொடுத்துள்ளனர். பின்னர் அந்த விமானம், சென்னையில் தரை இறங்கியதும் விமான நிலைய போலீசாரிடம் அந்த தொழில் அதிபர் ராகேஷ் மோகன் வர்மாவை பிடித்து கொடுத்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.