நமக்கு உடல் நிலையானது பாதிக்கப்பட்டுள்ள நேரத்தில் நமக்கு ஏதோ ஒரு விதமான அசதி இருக்கும். ஒரு நோயால் நாம் அவதியடையும் வெளியில் நமது உடலில் இருக்கும் ஆற்றல் மட்டும் குறைந்து போகிறது. மாறாக., நமது செயல்பாடுகளின் உற்பத்தி திறனும் பாதிக்கப்படும். இன்றுள்ள கால நிலையில் நமது உடலை பாதுகாப்பதற்கும்., பராமரிப்பதற்கும் எந்த விதமான செயல்பாடுகளை செய்கிறோம் என்பது பெரும் கேள்விக்குறியே…
நமது தமிழ் முன்னோர்கள் உணவை ருசிக்காக மட்டும் சாப்பிடாமல்., அதனுள் இருக்கும் மருத்துவ குணத்தை அறிந்தும் சாப்பிட்டு வந்தனர். நமது முன்னோர்கள் உணவுகளுக்கு உபயோகப்படுத்திய பொருளில் இருக்கும் மருத்துவ குணங்கள் அளப்பரியது. அதில் இருக்கும் மருத்துவ குணத்தை அறிந்த நமது முன்னோர்கள் உணவில் ஓர் அங்கமாக சேர்த்து வளமான வாழ்க்கையை வாழ்ந்து வந்துள்ளனர்.
தினமும் காலையில் எழுந்தவுடன் நீரை மிதமான சூடாக்கி அதனுடன் 9 மிளகுகளை சேர்த்து சுமார் ஒரு மாதம் வரை குடித்து வந்தால் நமது உடலில் ஏற்படும் பெரும் பிரச்சனையில் இருந்து விலக்கம் அடைந்து வளமான வாழ்வை வாழலாம். மிளகில் இருக்கும் ஆன்டி-பாக்டீரியல் மகத்துவத்தின் மூலமாக நமது உடலில் இருக்கும் செரிமான மண்டலத்தின் ஆரோக்கியமானது பாதுகாக்கப்படும்.
நமது உடலில் இருக்கும் பாக்டீரியாவை எதிர்த்து போராடி நமது உடலில் இருக்கும் பாக்டீரியாக்களை அழித்து நமது உடலை பாதுகாக்கும். இதன் மூலமாக ஆஸ்துமா மற்றும் நாள்பட்ட மூட்டு வலியானது நமது உடலை விட்டு ஓடும். மிளகில் இயற்கையவகவே இருக்கும் நோயெதிர்ப்பு தன்மையின் மூலமாக நமது உடலில் ஏற்படும் பிரச்சனைகளை சரி செய்து நமது உடலை பாதுகாக்கிறது.
தினமும் சாப்பிடும் மிளகில் இருக்கும் நார்ச்சத்துக்கள்., வைட்டமின் சி மற்றும் வைட்டமின் கே., மாங்கனீசு சத்துக்கள் மற்றும் இரும்புச்சத்துக்கள் அதிகளவில் உள்ளது. இதன் மூலமாக இரத்தத்தை சுத்திகரித்து., உடலில் இருக்கும் ப்ரீ-ராடிக்கல்களை வெளியேற்றுகிறது. வயிறு சரியில்லாத நேரத்தில் மிளகை சாப்பிட்டால் அதில் இருக்கும் பெப்பரின் வேதி பொருளின் மூலமாக நமது வயிறில் ஹைட்ரோகுளோரிக் ஆசிட் உற்பத்தியை அதிகரித்து., செரிமான பிரச்சனைக்கு நல்ல தீர்வை வழங்குகிறது.
நமது உடலில் ஏற்படும் வாயுத்தொல்லையை நீக்குகிறது. உடல் எடையை குறைக்க வேண்டும் என்று விரும்பும் நபர்கள்., உணவில் அதிகளவு மிளகை சேர்த்து வந்தால் உடலில் சேரும் கொழுப்புகளை குறைத்து நமது உடல் எடையை பராமரிக்கிறது. அதிகம் என்று அளவில்லாமல் சாப்பிட்டால் அது பிற உபாதைகளுக்கு வழிவகுக்கும். அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்ற பழமொழியை நினைவில் கொண்டு செய்லபட வேண்டும்.