குடும்பமா., கூட்டணியா? சிக்கலில் சிக்கிய ராமதாஸ்?

அடுத்த மாதம் 18 ம் தேதி பாராளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கு அதிமுக பாமகவுடனும், மத்தியில் பாஜகவுடனும் கூட்டணி அமைத்துள்ளது.

அதேபோல், திமுக மத்தியில் காங்கிரஸுடனும், மாநிலத்தில் மதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளுடனும் கூட்டணி அமைத்துள்ளது. தொடர்ந்து அந்தந்த கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் மற்றும் வேட்பாளர்கள் குறித்த விவரங்கள் வெளியிடப்பட்டு தற்பொழுது தேர்தல் பிரச்சாரம் சூடு பிடித்துள்ளது.

தமிழக அரசியலே தேர்தல் திருவிழாக்கோலம் பூண்டுள்ளது என கூறினால் மிகையாகாது. இந்நிலையில், பாட்டாளி மக்கள் கட்சிக்கு எதிர்பாராத சோகம் ஒன்று ஏற்பட்டுள்ளது.

ஆரணி பாராளுமன்ற தொகுதியில் அதிமுக வேட்பளார் ஏழுமலை போட்டியிடும் நிலையில், அவரை எதிர்த்து அன்புமணி ராமதாஸின் மனைவியின் சகோதரர் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிடவுள்ளார்.

இதனால், பலருக்கு பாமக கூட்டணியை ஆதரிக்குமா? அல்லது குடும்ப உறவை ஆதரிக்குமா? என கேள்வி எழுந்துள்ளது. பாமகவின் கொள்கை என பார்த்தால் அன்றிலிருந்து இன்று வரை எந்த இடத்திலும் விட்டு கொடுக்காமல் இருந்துள்ளது.

மது ஒழிப்பு, தமிழர்களின் வாழ்வாதார பிரச்சனை என எந்த கூட்டணியில் இடம்பெற்ற போதும், கொள்கை விஷயத்தில் பாமகவை அடித்துக்கொள்ள ஆளே இல்லை என பல மூத்த அரசியலவாதிகளே சான்றிதழ் வழங்கிய கட்சி பாமக தான் எனக்கின்றனர்.

எனவே, குடும்ப உறவு வேறு, கூட்டணி என்பது வேறு. அரசியலுக்கும், குடும்பத்திற்கும் சம்பந்தப்படுத்தி திமுக போன்ற எதிர்க்கட்சிகள் கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்த முயல்வதாகவும்,

கூட்டணிக்கு ஆதரவாக செயல்படுவது எங்களது கடமை என்றும், கடமையில் இருந்து ஒருபோதும் ராமதாஸ் தவற மாட்டார் என்றும் பாமகவினர் உறுதியளிக்கின்றனர்.