வெகுநேரமாக வெளியில் வராத இளம்பெண்! கதவை உடைத்து பார்த்தபோது அதிர்ச்சி!

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள திருமலைபாளையத்தை சேர்ந்தவர் ரங்கநாதன். செங்கல் சூளையில் வேலை பார்த்து வரும் இவருக்கும், பரிமளா என்ற பெண்ணிற்கும் திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். இந்த தம்பதியினர் இருவருக்கும் அடிக்கடி சச்சரவு ஏற்பட்டு வந்துள்ளது.

சம்பவத்தன்று பரிமளா எதோ ஒரு கோவத்தில் தனது குழந்தைகளை அடித்துள்ளார். அதனை பார்த்த பரிமளாவின் கணவர் மனைவியை திட்டியுள்ளார். இதனால் மனவேதனையடைந்த பரிமளா கழிவறைக்குள் சென்று புடவையால் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

பரிமளா கழிவறைக்கு சென்று நீண்ட நேரமாக வெளியே வராததால், கழிவறையின் கதவை தட்டியுள்ளனர் அக்கம் பக்கத்தினர். ஆனாலும் எந்த சத்தமும் வராததால் கதவை உடைத்து பார்த்த போது பரிமளா தூக்கில் தொங்கியுள்ளார்.

இதனைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் பரிமளாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். சம்பவம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.