அராஜகம் செய்யும் சிறுத்தைகுட்டிகள்! அதிரடியாக வலைவிரிப்பு!

ஒகேனக்கல் வனத்தின் அருகே கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ், கிருஷ்ணகிரி மற்றும் தருமபுரி ஆகிய மாவட்டங்களுக்கு குடிநீர் விநியோகம் செய்கின்ற நீரேற்று நிலையம் ஒன்று உள்ளது.

இந்த நீரேற்று நிலையத்தில் 24 மணி நேரமும் ஊழியர்கள் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய ஊழியர்களின் கட்டுப்பாட்டின் கீழ் பணியில் இருப்பார்கள். எதிர்பாராத விதமாக சிறுத்தை ஒன்று நேற்று முன்தினம் இரவு அங்கு புகுந்துள்ளது.

சுற்றிலும் இருளாக இருந்ததால் நாய் என நினைத்து விரட்டவே., அது அப்பகுதியில் இருந்து வெளிச்சத்தின் வழியாக பாய்ந்து ஓடியது. இதனை கண்ட ஊழியர்கள் அதிர்ச்சியில் உறைந்து போயினர்.

பின்னர், இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு வந்த வன அலுவலர் கேசவன் மற்றும் வனத்துறையினர் சிறுத்தையை தேடினர். ஆனால் எங்கு தேடியும் சிறுத்தை கிடைக்கவில்லை.

சிறுத்தை உயிருடன் பிடிக்க முடிவு செய்த வனத்துறையினர் வலைகளை கட்டி சிறுத்தையை பிடிக்க முயன்று வருகின்றனர். நீரேற்று நிலையத்தின் அருகில் புதர்கள் மண்டிக் கிடக்கிறது.

இதனால் சிறுத்தை அங்கு பதுங்கி இருக்கக் கூடும் என நினைக்கின்றனர். சிறுத்தையை பார்த்த ஊழியர்கள் அது பத்து கிலோ எடை கொண்ட குட்டி சிறுத்தையாக இருக்கக்கூடும் என தகவல் அளிக்கின்றனர்.

ஏற்கனவே இது போல பல இடங்களில் சிறுத்தைகள் இப்பகுதியில் உலாவி பொதுமக்களை தாக்கி வந்த சம்பவம் குறிப்பிடத்தக்கது.