இரவில் வீட்டின் கதவை தட்டிய மர்ம உருவம்.! வெளியான அதிர்ச்சி தகவல்.!!

இலங்கை நாட்டில் இருக்கும் அடுக்கம்பாறை மாவட்டத்திற்கு உட்பட்ட கிராமத்தில் உள்ள பகுதிகளில் இரவு நேரத்தில் சுமார் 2 அடி உயரமுள்ள குள்ள நபர்கள் நடமாடுவதாகவும்., அங்குள்ள வயல்வெளி பகுதிகளில் இந்த நடமாட்டம் காணப்படுவதாகவும் அச்சம் தெரிவித்துள்ளனர். அங்குள்ள கருணாதிலக் என்ற விவசாயி தனது தனது நிலத்தில் பயிரிடப்பட்டிருந்த பயிர்களுக்கு காவலாக கடந்த பிப்ரவரி 2 ம் தேதியன்று வயல்வெளிக்கு சென்ற நேரத்தில்., அங்குள்ள மரத்தடியில் அமர்ந்திருந்துள்ளார்.

அந்த நேரத்தில்., சுமார் இரண்டு அடி உயரமுள்ள., நீளமான தலைமுடிகளுடன்., சிவப்பு நிறத்துடன் கூடிய முகம் மற்றும் உதடுகள் காணப்பட்டது. அதனை பார்த்து யார் நீ என்று கேட்டதற்கு., அங்கிருந்து செல்ல சொன்னதற்கும் எந்த விதமான பதிலையும் தெரிவிக்காமல்., என்னையே உற்றுநோக்கி பார்த்துக்கொண்டு இருந்தது. இதனால் பதறிய நான் அங்கிருந்து கிராமத்திற்கு சென்று உதவிக்கு ஆட்களை அழைத்து வருவதற்குள் அங்கிருந்து அந்த மர்மநபர் சென்றுவிட்டது.

மேலும்., அங்குள்ள காலடி தடங்கல் அனைத்தும் அந்த வினோதமான ஏலியனை ஒத்து இருந்தது என்று தெரிவித்தார். மேலும்., அடிக்கடி பறக்கும் தட்டுகள் போன்று சில விநோதங்கள் நடைபெறுவதாக அங்குள்ள மக்கள் அச்சம் தெரிவித்து வருகின்றனர். இந்த பிரச்சனைக்கு தீர்வுகள் அல்லது வானியல் ஆராய்ச்சி மையங்களில் இருந்து எந்த விதமான பதிலோ அல்லது விளக்கமோ தற்போது வரை வெளியிடப்படாத நிலையில்., மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

இந்த தகவலானது ஏற்கனவே வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில்., அங்குள்ள கலகெதர மாகாணத்திற்கு உட்பட்ட பகுதியில் குள்ள மனிதர்களின் அட்டகாசம் அதிகரித்துள்ளதாகவும்., சம்பவத்தன்று பெண்ணின் வீட்டில் இருந்த நாய் குரைத்து கொண்டு இருப்பதை கண்ட பெண் வெளியே சென்று பார்த்த போது நாயுடன் குள்ள மனிதன் சண்டையிட்டதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.

இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அவர் உதவிக்கு அலறிய படியே அக்கம் பக்கத்தினரை உதவிக்கு அழைத்ததை அடுத்து அங்கிருந்து குள்ள உருவமானது தப்பி சென்றுள்ளது. அதே போன்று அங்குள்ள பிற பகுதியில் இரவு ஒரு மணியளவில் குள்ள உருவமானது ஒரு வீட்டின் கதவை தட்டவே., இதனை கண்ட மக்கள் உடனடியாக அதனை தாக்குவதற்கு முற்பட்ட போது அந்த குள்ள உருவம் சுமார் 10 அடி தூரத்திற்கு தாவி சென்று உள்ளது. இதனை கண்ட அப்பகுதி மக்கள் செய்வதறியாது இது குறித்து காவல் நிலையங்களில் புகார் அளித்த வண்ணம் உள்ளனர்.