காஞ்சீபுரம் மாவட்டம் செய்யூர் பகுதியை சேர்ந்த கிருஷ்ணராஜ் என்பவர் சென்னையில் தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்துள்ளார். அவர் வேலைசெய்யும் கம்பெனியில் சென்னை திருவொற்றியூர் பகுதியை சேர்ந்த திவ்யா என்பவரும் பணிபுரிந்து வந்துள்ளார்.
இந்தநிலையில் இவர்கள் இருவரும் காதலித்து வந்துள்ளனர். இதனால் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு திவ்யா, கிருஷ்ணராஜிடம் கூறியுள்ளார். ஆனால் கிருஷ்ணராஜ் திருமணம் செய்ய மறுத்துவிட்டு, திவ்யாவை சந்திப்பதை தவிர்த்து வந்துள்ளார்.
இதனையடுத்து, திவ்யா, தனது காதல் பற்றியும், காதலன் தன்னை திருமணம் செய்ய மறுத்ததையும் தனது தாயார் கவிதாவிடம் கூறியுள்ளார். இதனையடுத்து திவ்யாவின் தாய் கவிதா, கிருஷ்ணராஜிற்கு திவ்யாவை திருமணம் செய்து வைக்க முடிவு செய்துள்ளார்.
இதனையடுத்து கவிதா, கிருஷ்ணராஜிற்கு போன் செய்து, திருமணம் தொடர்பாக பேச வேண்டும் என கூறி அவரை திருவொற்றியூரில் உள்ள ஒரு கோவிலுக்கு வருமாறு அழைத்துள்ளார். இதனால் கிருஷ்ணராஜ், தனது நண்பர் வழக்கறிஞர் வசந்தகுமார் என்பவருடன் சென்றுள்ளார். திடீரென மர்ம கும்பல் கிருஷ்ணராஜை மட்டும் காரில் ஏற்றிவிட்டு வேகமாக ஓட்டி சென்றனர்.
இதனையடுத்து அதிர்ச்சியடைந்த வழக்கறிஞர் வசந்தகுமார் திருவொற்றியூர் காவல்நிலையத்திற்கு சம்பவம் குறித்து தகவல் கொடுத்துள்ளார். இதனையடுத்து போலீசார் காரை பின்தொடர்ந்து சென்று காரை மடக்கி நிறுத்தி கிருஷ்ணராஜை மீட்டனர். பின்னர் சம்பவத்தில் ஈடுபட்ட நபர்களையும், கவிதாவையும் போலீசார் கைது செய்தனர்.