புகார் அளித்த தோனி.!! அதிகாரிகள் செய்த செயலால் கோபம்?

ஐபிஎல் என்றாலே அனைவருக்கும் நினைவிற்கு வருவது சிஎஸ்கே அணி தான். தற்போது ஐபிஎல் சீசன் தொடங்கி விட்டது. முதல் கட்ட ஆட்டம் துவங்கி சிஎஸ்கே மற்றும் ஆர்சிபி அணிக்கு இடையே போட்டி நடைபெற்றது.

அந்த போட்டியில் டோனி தலைமையிலான சிஎஸ்கே அணி வெற்றிபெற்றது. கிரிக்கெட் என்றாலே பலருக்கும் டோனி தான் நினைவுக்கு வருவார். அந்த அளவு தோனி கிரிக்கெட்டில் பிரபலமாகியுள்ளார்.

அவரை ரசிகர்கள் வரைமுறையின்றி கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் சிஎஸ்கே அணி கேப்டன் தோனி சென்னையில் ஒரு நட்சத்திர ஓட்டலில் தங்கியுள்ளார். அவர் காவல் ஆணையரிடம் புகார் ஒன்றை அளித்ததாக தகவல்கள் வெளியாகின்றன.

தோனி தனது மேலாளர் மூலமாக இந்த புகார் அளித்துள்ளதாகவும் தெரிகிறது. அந்த புகாரில், ‘தனது தனிப்பட்ட சுதந்திரத்திற்கு இடையூறு தரும் வகையில் சில காவல் அதிகாரிகள் தங்களது குழந்தைகளை அழைத்து வந்து செல்பி எடுக்க தன்னை நிர்பந்திப்பதாகவும்,

இது தனக்கு மிகவும் இடைஞ்சலை உருவாக்குவதாகவும்’ கூறப்பட்டுள்ளது. தனது தனிப்பட்ட சுதந்திரத்தை தடுக்கும் வகையில் இதற்கு எப்படி அனுமதி தருகிறார்கள்? எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்த புகார்கள் காவல் ஆணையருக்கு அனுப்பப்பட்டுள்ளது.’டோனி சாதாரணமாகவே அனைவருடனும் பழக கூடியவர். ஆனால், சமீபகாலமாக ரசிகர்கள் அவரை காணவும் அவரிடம் கைகுலுக்கவும் வரும் பொழுது அவர்களை தவிர்க்கும் விதமாக அவர்களிடம் விளையாடுவார்.

அவ்வாறு உள்ள நிலையில் தோனியின் தனிப்பட்ட சுதந்திரம் பாதிக்கப்படும் அளவில் அதிகாரிகள் செயல்பாடு இருப்பது கண்டிக்கத்தக்கது’ என அவரது ரசிகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.