பிரித்தானியாவில் இரவில் உணவகத்திற்குள் நடந்த பயங்கரம்!

பிரித்தானியாவில் இலங்கையை சேர்ந்த இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

Pinner பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற கத்தி குத்து தாக்குதலில் இலங்கையை சேர்ந்த ரவி என்பவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அவரது கடையில் கொள்ளையடிக்க சென்ற கொள்ளையர்களே இந்த கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இலங்கை இளைஞன் மீது கத்தி குத்து தாக்குதல் நடத்தப்பட்ட இடத்திற்கு பொலிஸார் அழைக்கப்பட்ட போதிலும் 45 நிமிடங்களில் அவர் உயிரிழந்துள்ளார்.

இந்த இளைஞன் மிகவும் அன்பானவர் என அந்த பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். அவர் காலையிலேயே தனது உணவு கடையை திறந்து வைத்து விட்டு, அவரே வீடுகளுக்கு உணவு வழங்க செல்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர் தொடர்பில் கருத்து வெளியிட்டவர்கள், “அவரது பெயர் ரவி, அண்மையில் அவரது மனைவி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். மிகவும் அன்பான மனிதன். இரக்க குணமுடைய சிறந்த நபர். அவர் கண்ணாடி அணிந்திருப்பார்.

எந்த நேரமும் புன்னகையுடன் இருப்பார். நாங்கள் அவருடன் சில விளையாட்டுக்களையும் விளையாடுவோம். அந்த கடையில் வாரத்திற்கு 5 நாட்கள் ரவி பணியாற்றுவார்.

அப்பாவியான இந்த இளைஞன் பணி செய்ய சென்ற போது கொலை செய்யப்பட்டதென்பது மிகவும் கொடுமையான விடயமாகும். அன்பான ஒருவரை திருட்டு சம்பவத்தினால் இழந்துவிட்டோம் என தெரிவித்துள்ளனர்.

இந்த கடையில் 6 மாதங்களுக்கு முன்னரும் இதேபோன்று கொள்ளை சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பிரித்தானியால் இரவில் இவ்வாறு தொடர் கொலைகள் இடம்பெற்று வருதென்பது வேதனை அளிப்பதாக அந்தப் பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

இளைஞன் கொலை செய்யப்பட்டமை தொடர்பில் குடும்பத்தினருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளதாகவும், சந்தேகநபர்களை கைது செய்வதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் ஸ்கொட்லன்ட் யார்ட் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.