இந்தியாவின் கேரள மாநிலத்தை சேர்ந்த யூசுப் அலி காதர் ஸ்காட்லாந்து யார்டு சிறையை விலைக்கு வாங்கி அதனை தற்போது தங்கும் விடுதியாக மாற்றி அமைத்துள்ளார்.
அபுதாபியைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் லுலு குழும நிறுவனங்களின் நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குநர் ஆவார்.
இந்தியாவின் 24வது பணக்காரான யூசுப்பின் சொத்து மதிப்பு 5.6 பில்லியன் டொலர். உலக அளவில் 270-வது பணக்காரர் என்றும் போர்ப்ஸ் இதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்காட்லாந்து யார்டு கட்டிடத்தை 2015 ஆம் ஆண்டு கலியார்டு ஹோம்ஸ் நிறுவனத்திடமிருந்து 110 மில்லியன் பவுண்ட்க்கு (1,000 கோடி) வாங்கிய யூசுப், சுமார் 75 மில்லியன் பவுண்ட் செலவு செய்து அதனை தற்போது 150 அறைகளை கொண்ட தங்கும் விடுதியாக மாற்றியுள்ளார்.
ஒரு இரவுக்கு இங்கு தங்குவதற்கு வாடிக்கையாளர்கள் 10,000 பவுண்டுகள் வரை கட்டணம் தருவதற்கு தயாராக இருக்கிறார்கள்.
இங்கு, பழைய இராணுவ சீருடைகள், கைதிகளின் கலைப்படைப்புகள் ஆகியவை இடம்பெற்றுள்ளன. இவை இங்குத் தங்கும் வாடிக்கையாளர்களுக்கு, லண்டனின் பிரபல கிரிமினல்களை நினைவுபடுத்துவதாக உள்ளன.
பெரும்பாலான சிறைகள், சந்திப்பு அறைகளாகவும், தேநீர் விடுதிகளாகவும் மாற்றப்பட்டுள்ளன.