கணவன் இறந்த இடத்தை பார்க்க லண்டனிலிருந்து சென்ற மனைவி-மகன்! நெஞ்சை உருக்கும் புகைப்படங்கள்

எத்தியோப்பிய விமான விபத்தின் காரணமாக கணவனை பறிகொடுத்த மனைவி, விபத்து நடந்த இடத்திற்கு தன் மகனை அழைத்துச் சென்ற புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

எத்தியோப்பியா ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான பயணிகள் விமானம் ஒன்று கடந்த 10-ஆம் திகதி தலைநகர் Addis Ababa-விலிருந்து புறப்பட்ட அடுத்த ஆறு நிமிடங்களில் கீழே விழுந்து நொறுங்கியது.

இதில் விமான ஊழியர்கள், பயணிகள் என விமானத்தின் உள்ளே இருந்த அனைவரும் பலியாகினர். இதில் பிரித்தானியவைச் சேர்ந்த 7 பேரும் பலியாகினர்.

அதில் Waithaka என்பவர், இந்த விமான விபத்தில் பரிதாபமாக இறந்தார்.

இவரின் மனைவி Jane Waithaka மற்றும் பிள்ளைகள் East Yorkshire-ல் இருக்கும் நிலையில், சமீபத்தில் இவரின் மனைவி மற்றும் மகன் Ben Kuria விபத்து நடந்த பகுதிக்கு சென்றுள்ளனர்.

இது குறித்து Ben Kuria, விபத்து நடந்த பகுதியை பார்க்க வந்த போது, அம்மா மிகவும் உடைந்துவிட்டார்.

இங்கே ஷுக்கள், உடைந்த போனின் பாகங்கள் போன்றவை கிடக்கின்றன. இந்த விமான விபத்து எப்படி நடந்தது என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. அதை நாங்கள் கவனித்து வருகிறோம்.

குறிப்பாக நாங்கள் இங்கு வந்தவுடன் ஏராளமானோர் அங்கு குவிந்துவிட்டனர். மிகவும் உணர்ச்சிகரமாக இருந்தது.

விமான விபத்து ஒரு ஆள்நடமாட்டே இல்லாத இடத்தில் நடந்த போன்று உள்ளது. விபத்தில் சிக்கியவர்களை காப்பாற்ற கூட அருகில் யாரும் இல்லை போல் தெரிகிறது என்று கூறியுள்ளார்.