இந்த உலகில் இருக்கும் விதவிதமான வாகனங்களில் பல வகையான வாகனங்களின் திறன்., வேகம் மற்றும் வடிவமைப்பு போன்றவற்றை பார்த்து ரசித்து அதனை வரவேற்று கொண்டாடியிருப்போம். அந்த வகையில்., சில வாகனங்களின் சில செயற்பாட்டு குறைபாட்டின் காரணமாக நாம் சிரித்தும் உண்டு.
கடந்த சில வாரங்களுக்கு முன்னதாக வாகனத்தில் கியர் இல்லாமல்., மூங்கிலினால் ஆன குச்சியை கியர் பொருத்தும் இடத்தில் வைத்து பள்ளி மாணவர்ளை அழைத்து செல்லும் வாகனத்தில் அரங்கேறிய சம்பவமானது நாடு முழுவதும் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனை கண்டு பல பெற்றோர்கள் கடும் அதிர்ச்சிக்கு உள்ளாகினர்.
அதனை போன்றே ரஷியாவில் உள்ள பேருந்தில் டயருக்கு பதிலாக மரக்கட்டையை பயன்படுத்திய பதைபதைக்க வைக்கும் வீடியோ காட்சியானது வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வாகனத்தில் செல்லும் போது எதிர்பாராத விதமாக அந்த சிற்றுண்டியை கண்ட நபர் தனது அலைபேசியில் பதிவு செய்து இணையத்தில் பரப்பவே இது தொடர்பான வீடியோ காட்சி வைரலாகியுள்ளது.
பின்புறம் இருக்கும் டயருக்கு பதிலாக மரக்கட்டையை பொருத்திவிட்டு., வாகனத்தை எந்த விதமான குலுங்களும் இல்லாமல் சாலையில் இயக்கி சென்று கொண்டு உள்ளார். சாலையில் செல்லும் வாகனத்தின் மீது பொருத்தப்பட்டுள்ள மரக்கட்டையானது தேய்ந்து புகை சிறியளவில் வெளியேற துவங்குகிறது. இதனை கண்ட மக்கள் மெக்கானிக்கை அழைத்து கூடவா வர இயலாது., ஏதேனும் விபத்துகள் ஏற்பட்டால் என்னவாகி இருக்கும் என்று தெரிவித்துள்ளனர்.