காதலித்தோம் என்ன செய்வது? நீ உன் பாதையில் செல்.! பிளான் போட்டு தூக்கப்பட்ட காதலன்.!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள செய்யாறு பகுதியை சார்ந்தவர் கிருஷ்ணராஜ் (வயது 25). சென்னையில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வரும் இவருடன் சக பணியாளராக., சென்னையை சார்ந்த 20 வயதுடைய பெண் பணியாற்றி வந்துள்ளார். இவர்கள் இருவருக்கும் இடையே ஏற்பட்ட பழக்கமானது நாளடைவில் காதலாக மாறவே., இருவரும் காதலித்து வந்துள்ளனர்.

இவர்களின் காதலை பல்வேறு இடங்களுக்கு சென்று வளர்த்து வந்துள்ளனர். மேலும்., பல முறை டேட்டிங் செய்தும் தங்களின் காதல் வாழ்க்கையை வளர்த்து வந்துள்ளனர். இந்நிலையில்., இவர்கள் இருவரும் தங்களின் காதல் விருப்பங்களை தங்களின் பெற்றோரிடம் தெரிவித்து திருமணம் செய்து கொள்ளலாம் என்ற எண்ணத்தில் இருந்து வந்துள்ளனர்.

இந்த சூழ்நிலையில்., இவர்கள் இருவரும் திருமண பேச்சை துவங்கிய நாட்களில் இருந்து காதலி அலைபேசியில் அழைக்கும் சமயத்தில் அவரின் அழைப்பை ஏற்க மறுத்துள்ளார். மேலும்., அவர் வழிய வந்து பேசும் சமயத்திலும் அவரின் பேச்சை கேட்க மறுத்து விலகி சென்றுள்ளார். இதனால் சந்தேகமடைந்த காதலி., இது குறித்து கிருஷ்னராஜிடம் கேட்கவே., உன்னை எனக்கு பிடிக்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.

இதனால் ஆத்திரம் அடைந்த பெண் இது குறித்து தனது தாயாரிடம் கூறி அழுதுள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த பெண்ணின் தாயார் கிருஷ்ணராஜை கடத்தி திருமணத்திற்கு சம்மதம் தெரிவிக்க வைக்கும் நடவடிக்கையில் ஈடுபட திட்டமிட்டுள்ளார். இவரின் திட்டப்படி பெண்ணை தனது காதலருக்கு தொடர்பு கொள்ள கூறி கடைசியாக கோவிலில் இருவரும் சந்திக்கலாம்., அதற்கு பின்னர் நீ சென்று விடு என்று கூறியுள்ளார்.

இவரின் அழைப்பை ஏற்ற கிருஷ்ணராஜ் கோவிலுக்கு தனது நண்பரான வசந்தகுமாருடன் சென்றுள்ளார். வசந்தகுமார் வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார். இவர்கள் இருவரும் கோவிலுக்கு சென்றதை அடுத்து., கிருஷ்னராஜை அடித்து காரில் ஏற்றி சென்றுள்ளனர். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அவர் உடனடியாக இது குறித்த தகவலை காவல் துறையினருக்கு தெரியப்படுத்தினார்.

இதனை அறிந்த காவல் துறையினர் உடனடியாக இது குறித்து வழக்குப்பதிவு செய்து உடனடியாக கார் குறித்த தகவலை அறிந்து., உடனடியாக அனைத்து காவல் நிலையத்திற்கும் தெரியப்படுத்தினர். இதனை அறிந்த காவல் துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபடவே., மணலி பகுதியில் காரில் கடத்தப்பட்டு சென்ற கிருஷ்னராஜை மீட்டனர்.

அந்த சமயத்தில் காரில் இருந்த கவிதா., சங்கர் குமார் மற்றும் ஹரி கிருஷ்ணன் ஆகியோரை காவல் துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவமானது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.