தமது மகனை சித்திரவதைக்கு உள்ளாக்கி படுகொலை செய்தவர்களை கல்லால் அடித்து கொன்று விடுங்கள்.. அதுவே ஒரு தமக்கு செய்யும் பேருதவி எனறு தாயார் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நடந்த இச்சம்பவம் மாநிலத்தை முழுவதும் உலுக்கியிருந்தது.
கொல்லப்பட்ட அனந்து என்ற 21 வயது இளைஞரின் குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ள கோவில் ஒன்றில் திருவிழா நடந்து வந்துள்ளது.
இதில் இரு குழுவினருக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, அது பின்னர் கைகலப்பில் கொண்டு சேர்த்தது. அச்சம்பவத்தின்போது அனந்துவும் உடன் இருந்துள்ளார்.
சம்பவத்தன்று பகல் 5 மணி வேளையில் பரபரப்பான சாலையில் வைத்து 3 பேர் கொண்ட கும்பல் அனந்துவை வலுக்கட்டாயமாக அவர்கள் வந்த இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்றுள்ளனர்.
ஏன் என்று விசாரித்த அப்பகுதி நபர் ஒருவரை, அந்த கும்பல் எச்சரித்துள்ளது. மட்டுமின்றி, அச்சத்தில் அந்த நபர் எவருடனும் அந்த தகவலை தெரிவிக்கவும் இல்லை.
இதனிடையே அந்த மூவர் கும்பல், அனந்துவை நகரின் புதர் மண்டிய பகுதிக்கு கொண்டு சென்று, காத்திருந்த இன்னொரு 7 கொண்ட கும்பலிடம் ஒப்படைத்துள்ளனர்.
மது, போதை மருந்து உள்ளிட்டவைகளால் வெறியுடன் இருந்த 10 பேர் கொண்ட கும்பல் அனந்துவை கொடூரமாக தாக்கியுள்ளனர்.
3 மணி நேரம் அந்த 10 பேர் கொண்ட கும்பல் அனந்துவை கொடூர சித்திரவதைக்கு உள்ளாக்கியுள்ளனர்.
அங்கிருந்த சுவற்றில் அனந்துவின் தலையை மோதவிட்டு திரைப்பட பாணியில் பழி தீர்த்துள்ளனர்.
இதனிடையே சுயநினைவை இழந்த நிலையில் கிடந்த அனந்துவின் கைகளில் நரம்பை அந்த கும்பலில் ஒருவன் வெட்டி எடுத்துள்ளான்.
இதனால் மரணம் ஏற்பட்டதாகவும், மண்டை ஓடு ஏற்கெனவே பிளர்ந்திருந்ததாகவும் மருத்துவர்கள் உறுதி செய்துள்ளனர்.
இதனிடையே, அனந்துவை காணவில்லை என பொலிசாருக்கு கிடைத்த புகாரின் அடிப்படையில் விசாரணை துவக்கப்பட்டது.
இருப்பினும், திருவனந்தபுரம் நகரின் முக்கிய பகுதியில் அமைந்துள்ள அந்த பாழடைந்த கட்டிடத்தில் பொலிசார் செல்லவில்லை.
பின்னர் அனந்துவின் சடலம் மீட்கப்பட்டது. உலகில் எந்த தந்தைக்கும் இதுபோன்ற ஒரு நிலை வரவே கூடாது என கூறும், அனந்துவின் தந்தை,
ஒருமுறை மட்டுமே எனது மகனை பார்த்தேன், அந்த நொடி சுய நினைவை இழந்து விழுந்துவிட்டேன் என கண்ணீருடன் அவர் நினைவு கூர்ந்துள்ளார்.