கொளுத்தும் வெயிலில் சின்னஞ் சிறுவர்களுக்கு தினமும் நடக்கும் அவலம்!

யாழ்.மாநகருக்குள் கொழுத்தும் வெய்யிலுக்குள் ஊதுபத்தி விற்பனை செய்து கொண்டிருக்கும் சிறுவா், சிறுமிகள் தொடா்பில் யாழ்.மாநகரசபை கவனம் செலுத்தவேண்டும் என சமூக வலைத்தளங்களில் கருத்துக்கள் வெளியாகி வருகின்றது.

எங்கிருந்து வருகிறாா்கள்? யாருடைய கண்காணிப்பில் இயங்குகிறாா்கள்? என்பது தொியாத நிலையில் யாழ்.நகருக்குள் பல சிறுவா்கள், சிறுமிகள் கொழுத்தும் வெய்யிலில் அங்கும் இங்கும் ஓடி ஊதுபத்தி விற்பனை செய்கின்றாா்கள்.

பலா் ஊதுபத்தியை வாங்காமல் பணத்தை கொடுத்துவிட்டு சென்று விடுகிறாா்கள். இவ்வாறே கையில் குழந்தைகளுடன் பல பெண்களும் இவ்வாறு ஊதுபத்தி விற்பனை செய்கிறாா்கள். இது குறித்து பொறுப்புவாய்ந்தவா்கள் கண்டுகொள்வதில்லை.

யாழ்.மாநகரசபையும் இவ்வாறான விடயங்கள் தொடா்பாக கண்டுகொள்வதில்லை. என சமூக வலைத்தளங்களில் கருத்துக்கள் பதிவிடப்படுவதுடன், இது குறித்து பொறுப்புவாய்ந்தவா்கள் கவனத்தில் எடுக்கவேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.