எகிப்தின் மத்தியஸ்தம் காரணமாக இஸ்ரேலுடன் போர் நிறுத்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது பாலஸ்தீனிய ஆயுத குழுவான ஹமாஸ்.
ஹமாஸ் ஆயுத குழுக்களின் கட்டுப்பாட்டில் உள்ள பிரதேசங்களில் இஸ்ரேல் தாக்குதலை முன்னெடுத்த நிலையில், பதிலடியாக எதிர் தாக்குதலும் நடத்தப்பட்டுள்ளது.
இதில் எழுவர் காயமடைந்ததாக டெல் அவிவ் பகுதி மக்கள் திங்களன்று தெரிவித்துள்ளனர்.
மட்டுமின்றி முக்கிய ஹமாஸ் தலைவரும் இந்த தாக்குதலில் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில் இஸ்ரேல் பகுதி நோக்கி ராக்கெட் குண்டுகள் வீசப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் பல தகவல் வெளியிட்டுள்ளன.
இதனிடையே அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு, எங்கள் மக்களை பாதுகாக்க எந்த எல்லைக்கும் நாங்கள் செல்ல அஞ்ச மாட்டோம் என்றார்.
இந்த நிலையிலேயே எகிப்தின் மத்தியஸ்தம் காரணமாக இஸ்ரேலுடன் போர் நிறுத்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது பாலஸ்தீனிய ஆயுத குழுவான ஹமாஸ்.