இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தினால் வருடாந்தம் நடாத்தப்படும் தரம் 05 புலமை பரிசில் பரீட்சையை இரத்து செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
பொலன்னறுவை ரோயல் கல்லூரியில் இன்று (25) மாலை இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே ஜனாதிபதி இதனைக் கூறியுள்ளார்.
இலங்கையில் நடைமுறையில் இருக்கும் தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சையினால் சிறுபிள்ளைகள் விளையாடும் வயதில் அவர்களை பரீட்சைக்கு என்று பெற்றோர்கள் தயார் செய்வதனால் அவர்கள் மனதளவில் பாதிக்கப்படுகின்றார்கள் என்றும், இது பிள்ளைகளின் எதிர்காலத்தைப் பாதிக்கும்
எனவே இப் பரீட்சையானது இரத்துச் செய்யப்பட வேண்டும் என நீண்டகாலமாக விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.
இந்நிலையில், பொலன்னறுவையில் நடந்த நிகழ்வின் போது ஜனாதிபதி இவ்விதம் உரையாற்றியிருப்பது பெற்றோர்களுக்கும் பிள்ளைகளுக்கும் மகிழ்ச்சி கொடுக்கும் தகவல் என குறிப்பிடப்பட்டுள்ளது.