பட்டையை கிளப்பும் அன்புமணி ராமதாஸ் – பிரபல ஊடகத்தின் நேரடி களநிலவர ரிப்போர்ட்..!

பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் அவர்களின் தொகுதியின் நிலவரத்தை பிரபல ஊடகம் கதிர் பிரத்யேகமாக நிருபரை கொண்டு கள ஆய்வு செய்து தனது முடிவை அறிவித்துள்ளது.

அதில், பெங்களூரை சேர்ந்த நிருபர் ஒருவரை தருமபுரிக்கு அனுப்பி நிலவரத்தை அறிந்தோம். பாராளுமன்ற வருகை பதிவேடு, கேள்விகள் குறைவாகக் கேட்டுள்ளார், சொந்த ஊர் இல்லை என்று பல நெகடிவ் பாயிண்டுகள் கொண்டுள்ளதாக ஊடகங்கள் எழுதி வருகின்றன.

ஆனால் தொகுதி நிலவரம் வேறுமாதிரியாக அமைந்துள்ளது. அன்புமணி தொகுதிக்கு குடிநீர் வசதி, பேருந்து நிலையம், நூலகம், மருத்துவமனை வளாகம் என்று பலவற்றைச் செய்துள்ளார்.

அது மட்டுமின்றி மொரப்பூர்- தருமபுரி ரயில் திட்டத்தை செயல்படுத்துவதற்கு அடிக்கல் நாட்டியுள்ளார்.

கட்சியின் அடிப்படையில் இங்குப் பாமக மிகவும் பலமானதாகவும் அதே போன்று அதிமுக, திமுகக் கட்சிகள் செல்வாக்குடன் உள்ளன. தேமுதிக, பாஜக ஆதரவாளர்கள் கணிசமாக உள்ளனர்.

கடந்த சட்டமன்ற தேர்தலில் எல்லாக் கட்சிகளும் வாக்கை பிரித்து விட்டன. மேலும் திமுகவினர், அதிமுகவினர் கடைசி நாளில் சுறுசுறுப்பாக வேலை செய்ததால் பாமக தனது கோட்டையில் தோல்வியை தழுவியது.

இந்தமுறை நிலைமை அவ்வாறு இல்லை. ஆளும்கட்சி அதிமுகவிற்கு எதிர்ப்பு குறைவாகவே உள்ளது. உதவித்தொகை, நலத்திட்டங்கள் பலவற்றை அதிமுகச் செயல்படுத்தி உள்ளதால் கிராமங்களில் அவ்வளவாக எதிர்ப்பு இல்லை.

சிஎஸ்டி, தூத்துக்குடி பிரச்சினை, பெட்ரோல் விலையேற்றம், நீட்தேர்வு போன்ற சிக்கல்களைப் பற்றி மக்கள் கண்டுகொள்ளவதாகத் தெரியவில்லை.

ஆனால் திமுக வேட்பாளர் டாக்டர் செந்தில்குமார் உள்ளூர்காரர் என்ற பலம் திமுகவிற்கு இருக்கிறது என்று நகர மக்கள் நம்புகிறார்கள்.

போனமுறை அமைச்சராக வருவார் அன்புமணி என்று எண்ணிய மக்கள் ஏமாற்றம் அடைந்தனர். ஆனால் இம்முறை அதிமுக கூட்டணி பலமாக உள்ளதால் அன்புமணி அமைச்சராக வருவார் என்று மக்கள் நம்புகிறார்கள்.

இதுவே அன்புமணிக்கு கூடுதல் பலமாக உள்ளது. பாமக, அதிமுக, தேமுதிக, பாஜக வாக்குகளைச் சேர்த்து பார்த்தால் கிட்டத்தட்ட 80 விழுக்காடு பாமகவிற்குக் கிடைக்கும் என்று புள்ளிவிபரங்கள் கூறுகின்றன.

ஆளும்கட்சி எதிர்ப்பு, திமுகவின் பணபலம் போன்றவற்றைக் கருத்தில் கொண்டாலும் இது வெறும் 20 விழுக்காடு மட்டுமே பாதிப்பை ஏற்படுத்தும்.

கூட்டணி கட்சியின் பலம் பாமகவின் செயல்பாடு இரண்டையுமே கூட்டிக் கழித்துப் பார்த்தால் இங்கு மாம்பழம் பழுக்கும் சூரியன் மறையும் என நமது ரிப்போர்ட் கூறுகிறது’ என்று தெரிவித்துள்ளது.