2019 மக்களவை தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. இதில் தமிழகத்தில் 39 தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் ஒரு தொகுதிக்கும் ஒரே கட்டமாக ஏப்ரல் 18ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது.
தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் 21-ஆம் தேதி தொடங்கியது. இதற்கான வேட்புமனு தாக்கல் இன்றுடன் நிறைவு பெறுகிறது.
மேலும், அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பிரசாரத்தை மேற்கொண்டு வருகிறார். அதிமுக தலையில் மெகா கூட்டணி அளித்துள்ளது. அந்த கூட்டணியில் பாமக, பாஜக, தேமுதிக, தமாகா, புதிய தமிழகம், புதிய நீதிக்கட்சி, என்.ஆர்.காங்கிரஸ் ஆகிய கட்சிகள் உள்ளது.
அதிமுக கூட்டணி கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதிமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து, முதலமைச்சர் பழனிசாமி தீவிர பிரசாரம் செய்து வருகிறார்.
இந்நிலையில் சிவகங்கை தொகுதி பாஜக வேட்பாளர் ஹெச்.ராஜா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. வேட்புமனு தாக்கலின் போது தேர்தல் விதிமுறைகளை மீறியதாக சிவகங்கை காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.