ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின் முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்துடன் இணைந்து செயல்பட்டு வந்தார். தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்களில் செந்தில் பாலாஜியும் ஒருவர்.
கரூரைச் சேர்ந்த போக்குவரத்துத்துறை அமைச்சர் விஜயபாஸ்கருடன் மோதல் உள்ளதால், மீண்டும் அதிமுகவுக்குச் செல்ல முடியாத நிலையில் செந்தில்பாலாஜி இருந்து வந்த நிலையில், கடந்த டிசம்பர் மாதம் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.
திமுக கட்சியில் மாவட்ட அளவில் பெரிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. தற்போது தேர்தல் நெருங்கி கொண்டிருக்கும் வேளையில் பதவிக்காக செந்தில் பாலாஜி என்னென்னவெல்லாம் செய்தார் என்ற தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
அவரது சொந்த மாவட்டத்தை சேர்ந்தவர்களே இதனை தெரிவித்துள்ளனர். இது குறித்து அவர்கள் பேசுகையில், கட்சிகளுக்கு அப்பாற்பட்டு கரூர் மாவட்ட அரசியல் களத்தில் ஆயிரம் ஆயிரம் ஆண்களுக்கு இடையில் தனித்திறமையால் வளர்ந்த வாசுகி முருகேசன் உடைய அரசியல் பாதையை தன் பொய் பரப்புரையால் வீழ்த்திய மனிதர் செந்தில் பாலாஜி
இப்பகுதி மக்களுக்கு ஒரு பிரச்சனை என்றால் காவல் நிலையத்திற்கு போன் செய்து பிரச்சனையை முடித்து வைப்பார். அப்படிப்பட்ட ஒரு மனம் படைத்த வாசுகி முருகேசன் உடைய அரசியலை உடைத்தவர்
கரூர் மாவட்டம் இன்றைக்கு தொழில்துறையில் வளர்ச்சி பெறுவதற்கு முக்கிய காரணம் முன்னாள் தொழில்துறை அமைச்சர் சின்னசாமி. அவருடைய அரசியல் வாழ்க்கையையும் தன் சுயநலத்திற்காக பொய் பிரச்சாரத்தால் முடக்கி வைத்தவர்.
அரவக்குறிச்சி சட்டமன்ற தேர்தலில் 2011ஆம் ஆண்டு செந்தில்நாதன் என்ற ஒரு இளைஞனை தன் சொந்தக் கட்சியில் வெற்றி பெறக் கூடாது என்று செட்டியாருக்கு மறைமுகமாக வெற்றியைத் தேடித்தந்தவர்.
2016 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் தன் சொந்தக் கட்சியைச் சார்ந்த கரூர் சட்டமன்ற வேட்பாளர் விஜயபாஸ்கரை தோல்வி அடையச் செய்வதற்காக காங்கிரஸ் கட்சியைச் சார்ந்த சுப்பிரமணி அவர்களுக்கு மறைமுகமாக பண உதவி செய்து அரசியல் செய்தவர்.
2012 ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சி மன்றத் தேர்தலில் கரூர் மாவட்டத்தில் தனக்கு விசுவாசமாக இருந்த ஒரே காரணத்திற்காக உள்ளாட்சியில் தோற்றவர்களை வெற்றி பெற்றவர்களாக அறிவித்தார்.
இவர் பிறந்த சாதி சமூகத்திற்கு என்ன செய்தார் அரசியல் களத்தில் நாட்டு மக்கள் பிரச்சினைக்காகவும் என்ன செய்தார். நாங்கள் அவரை பிடிக்காமல் கருத்தைச் சொல்ல வில்லை இது உண்மையான கருத்து கரூர் மாவட்ட மக்களுக்கு அனைவருக்கும் வெளிப்படையாக இருக்கின்ற கருத்து’ என்று கூறியுள்ளனர்.